அப்படித்தான்…

பொன் மீன்கள் நீந்திய..
அந்த சிறு குளத்தை,
நாம் கடக்கையில்..
நான்…
சற்று நின்று..
நீருக்குள்…
பார்த்து..
ரசித்தது,
பொன் மீன்களை,
மட்டும்…
அல்ல!!

வரண்ட மாலை..

விட்டெறியும் சிறு கல்லின் கனம் வாங்கி…
பரப்பில், வட்டங்கள், அரை வட்டங்கள்,…
தோற்றுவிக்கும் …
இந்தப் பிரிவுக்கால…
மாலைப்பொழுதில்…
நான்…
உன்னைத் தவிர…
நீரையும்…
பார்த்துக்கொண்டிருக்கிறேன்!

கொஞ்சம் சொல்லேன்!

தொலை தூரத்துத் தொடர் வண்டிப் பயணங்களும்..
மென் சோகம் கவியச் செய்யும்..மிகு..அடர் இருளும்..
தனிமை அமிழ்த்தும் இரவுகளில்..
தென்றல் கொணரும் சுக ராகமும்..
கனம் கொள்ளச் செய்வது ஏன் மனதை?
கேட்க மறந்தே போனேன்….!
ஆமாம்..
உன் எடையென்ன?

ரோஜா என்பது அதன் பெயர்..


ரோஜாவை முள் என மாட்டேன் நான்…
மேகத்தை மேகமென்பேன்!
நிலா எப்படி நட்சத்திரமாகும்?
ஊஞ்சல் நாற்காலியாகாது!
ஒரு போதும் சூரியன் பூமியில்லை!
பூ என்றே தான் பூவை அழைப்பேன்….
கடல் எப்போதும் கடல் தான்!
அலையும் கூட அப்படியே…
உன்னை மட்டும் எப்படியாம் “நண்பன்”என்று
அழைப்பது?

கனவு இல்லம்…

வாசலில் வேம்பு..
கொல்லையில் துளசி..
தொட்டிகளில் மலர்ந்து சிரிக்கும் ரோஜாக்கள்..
தரையெங்கும் பளிங்கு..
முற்றத்தில் ஊஞ்சள்..
நன்றாய்த்தான் இருக்கிறது வீடு!
ஆனாலும்..
கொசுக்கடியோடும், தண்ணீர்ப் பஞ்சத்தோடும்,
தடுமாறிய பழைய வீடு வருதென் கனவுகளில் அடிக்கடி!
கனவுக் காரணம்…
அப்போது நான் கவலையில்லா பள்ளி மாணவி என்பதா?
இல்லை….

பள்ளியில் இருந்தெனை
உன் மிதிவண்டியில்
கொண்டு விடும் தொலைவில் இருந்த வீடென்பதா?

…ஷஹி…
படங்கள் இணையத்திலிருந்து…( இது என் மீள் பதிவு)
Advertisements