நம்ம த்ரிஷா வோட லேட்டஸ்ட் ஹீரோ அக்ஷய் குமார்தான். அவங்க நடிச்ச பாலிவுட் படமான “கட்டா மீட்டா ” படத்தின் ஹீரோ… சமீபத்தில் இவர் ஒரு விழாவில் கட்ரினா கைஃபால் அவமானப்படுத்தப்பட்டார் என்று தெரிகிறது……

ஹிந்தி நடிகை கட்ரினா கைஃப் தீஸ் மார் க்ஹான் ஹிந்தி பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் கால தாமதமாய் விழாவுக்கு வந்தார்…

படத்தின் நாயகன் அக்ஷைகுமார் அவருக்காக காத்திருந்து நொந்து போய்விட்டார். கட்ரினா உள்ளே வந்ததும் அக்ஷய் அவரை வழியிலேயே சந்தித்து முறையிட்டார். சில சூடான வார்த்தைகள் பரிமாறப்பட்டன.

கட்ரினா இதுபோல பல மணி நேரம் தாமதமாய் விழாக்களுக்கு வருவது ஒன்றும் புதிதில்லை. இருந்தாலும் அன்று அக்ஷை பொறுமையிழந்துவிட்டார்.

ஆனாலும் இருவரும் இணைந்து பத்திரிக்கையாளர்களுக்கு போஸ் கொடுத்தனர்.

ஆனாலும் அதிலும் அக்ஷை கோபமாகவே இருப்பதை கவனிக்கலாம்……..

இந்த சமபவத்தை அடுத்து கட்ரினாவுடன் பல வெற்றிப் படங்களில் இணைந்து நடித்த அக்ஷய் இனி அவருடன் இணைந்து நடிப்பாரா என்பது சந்தேகம்தான்…

Advertisements