தேவையாபொருட்கள்:

*சுத்தம் செய்யப்பட்ட இறால்———-1/2கிலோ

*சின்ன வெங்காயம்———————–1/4கி

*தக்காளி————————————-2

*இஞ்சி,பூண்டு விழுது——————-1tbsp

*தனி மிளகாய் தூள்———————-2-3tbsp

*சீரக தூள்———————————-1tbsp

*உப்பு—————————————-தேவையான அளவு

செய்முறை:

இறாலுடன், இஞ்சி பூண்டு விழுது,1 சிட்டிகை மஞ்சள் தூள்,1tbsp மிளகாய்த்தூள்,தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து 1/2 மணிநேரம் ஊற வைக்கவும்.

பிறகு இருப்பு சட்டியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி[5-8tbsp],காய்ந்ததும் ,சிறிது சோம்பு,கறிவேப்பிலை போட்டு தாளித்து,வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும்.பின் தக்காளியைப் போட்டு வதக்கி,இறாலை கொட்டி,மீதமிருக்கும் மிளகாய் தூள்,சீரக தூளை போட்டுஎண்ணெயிலேயே வேக விடவும்.வெந்தவுடன் 2பச்சை மிளகாயை வகுந்து போடவும்.சிறிது பச்சை கொத்தமல்லியையும் 1கைபிடி போட்டு இறக்கினீங்கன்னாசூப்பரா இருக்கும்!!!! எண்ணெய ஊத்தி சாப்பிட்டுட்டு .என்னய திட்டாதீங்க.எப்போதுமே poly unsaturated fatty acids அதிகம் உள்ள எண்ணெய வாங்குங்க.ஆரோக்கியமா இருங்க……..

diet-b

Advertisements