புறப்பட்டு விட்டதாலேயே..
போய்ச்சேர வேண்டியதில்லை!
பயணித்த சுகம் போதும் …
பாதியில் திரும்புகிறேன்!

சக பயணியின் ,
சௌக்கியம் முக்கியம்!
சங்கடங்கள் தவிர்க்க..
சந்தோஷமாய்..
விடை கொடு!

முட் காடு மீதெந்தன் ,
பாதம் பட வேண்டாம்!
பார்வை பட்டாலே,
புண்ணாகும் என் நெஞ்சம்!

சுற்றி நீ காட்டுகையில்..
சுகமாய் சாய்ந்திருந்தேன்..
சொக்கின கண்கள்..
ஆனாலும்
சுயமாய் இருந்தேன் நான்!

என்னை நான் தொலைத்து..
இன்னுயிர் வளர்க்க விருப்பமில்லை!
சாகும் வரையில்,
வாழ்ந்து விட்டுப்  போகிறேனே!

…ஷஹி…
மீள் பதிவு
Advertisements