நல்ல ஆரோக்கியமான வாழ்வுக்கு நல்ல உணவு தான் அடிப்படை.அதுவும் வளரும் குழந்தைகளுக்கு சத்தான உணவு கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.குழந்தைகளுக்கு புரதச்சத்து நிறைந்த [protein rich foods]உணவை கொடுப்பது மிகவ்ம் நல்லது.ஒரு கட்டிடம் அமைக்க எவ்வாறு செங்கற்கள் பயன் படுகின்றனவோ,அவ்வாறே குழந்தகளின் வளர்ச்சிக்கும்,இயக்கங்களுக்கும் புரதம்[protein]தேவைப்படுகிறது[body building foods].எங்கேயாவது தேய்மானம் ஏற்பட்டாலோ,குறைவு நேர்ந்தாலோ,புரதம் தான் அப்பகுதியை சீர்படுத்த துவங்குகிறது[repairs the tissues].

நாம் உண்ணும் புரோட்டீன்களின் அளவு எவ்வளவு முக்கியமோ,அந்த அளவிற்கு அதன் தரமும் முக்கியம்.இறைச்சி வகைகள்,மீன் கோழி,முட்டை,பால் பொருட்களிலிருந்து கிடைக்கும் புரதம் நல்ல தரமான புரதம்[high quality protein].அதே போல் சைவ உணவு உண்பவர்களுக்கு சோயா பீன்ஸிலிருந்தும்,பனீரிலிருந்தும்[paneer] கிடைக்கும் புரதம் நல்ல தரமானது.

முதலில் முட்டையில் உள்ள சத்துக்களைப் பார்ப்போம்.மற்ற உணவுகளிலிருந்து கிடைக்கும் புரதத்தைவிட,முட்டையில் இருந்து கிடைக்கும் புரதம், நல்ல தரமானது[high quality protein].

*ஒரு கோழி முட்டையின் சராசரி எடை 60 கிராம்.

*ஒரு முட்டையில் 214mg கொலஸ்டீரால் இருக்கிறது.

*மற்ற உணவுகளில் எளிதாக பார்க்க முடியாத albumin,glutamin முட்டையில் இருக்கிறது.மேலும் vit-D [one of the few natural source of vit-D]மஞ்சள் கருவில் இருக்கிறது.

*முட்டையில் உள்ள vit-A வளர்ச்சிக்கு உதவுகிறது.

*vit-E நம்மை புற்றுநோயிலிருந்து காக்கிறது.

*100கிராம் முட்டையில் உள்ள சத்துக்கள்:

protein:12.5gm

fat:           13.1gm

calcium:50mg

phosphorous:178mg

iron:1.44mg

vit-A: 634IU

vit-D: 49IU

*முட்டையை கழுவினால் அதில் உள்ள protective coating போய்விடும்.பாக்டீரியாக்கள் எளிதாக முட்டைக்குள் நுழைந்துவிடும்.so don’t wash eggs.

அடேங்கப்பா! முட்டை இவ்ளோ நல்லதா!!அப்படீன்னு நினச்சுகிட்டு முட்டைய half-boil,omlette-ஆ போட்டு சாப்பிட்டு உங்க கொலஸ்டீரால ஏத்திக்காதீங்க.இது உங்கள மாதிரி வளந்த பிள்ளைங்களுக்கு இல்ல,உங்க வீட்ல இருக்கிற வளர்ர பிள்ளைங்களுக்கு.

அடுத்து பனீர்[paneer]பற்றி பார்க்கலாம்.

diet-b

Advertisements