விடுத்தான்களின் வீரசாகசங்கள்

(குட்டீஸ், வாண்டூஸ், வாலூஸ் என்று குட்டி பசங்களை குறிப்பிடுவதுண்டு. அதைப் போல தஞ்சையில் விடுத்தான்கள் என செல்லமாக அழைப்பதுண்டு. இதுவும் ஒரு குட்டீஸ் கதைதான்… அதனால் தான் இந்தப்பெயர்)

லைலாக்கா வாங்கிய முயல்கள்

லைலாக்கா வீடு ரோஷ்னியின் பிரவேசம்!

அதிக மனித நடமாட்டமில்லாதது அந்த பகுதி.ஊரும் அமைதியானதுதான். லைலாக்கா என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் அவள் எப்போதோ ஒரு முறை மனிதர்களைப் பார்த்தால் போதுமா? தனியாவே கொட்டுகொட்டுனு எவ்வளவு நேரம்தான் இருப்பது? வீட்டில் டிவி கூட கிடையாது. டிவி வாங்கித்தர யார் இருக்காங்க? எனவே சந்தைக்குப்போனால் ஏதாவது செல்லப்பிராணிகளாவது கிடைக்கும் எனத்திட்டமிட்டாள் உடனெ செயலிலும் இறங்கிவிட்டாள் பளீச்சென்ற ஒரு மிடியை மாட்டிக்கொண்டு கொஞ்சம் பணத்தையும் எடுத்துக்கொண்டு அந்த ஊர் சந்தையை நொக்கி கிளம்பிவிட்டாள். சந்தையில் விதவிதமான காய்கனிகளும் பழங்களும் அப்பளங்களும் நிரம்பிக்கிடந்தன. ஆடுகள் மாடுகள் என்று பலவும் இருந்தன! எதை வாங்குவது? பார்த்துக்கொண்டும் யோசித்துக்கொண்டும் வந்தவளின் கணகளில் ஒரு இடத்தில் துருதுருவென விளையாடிக்கொண்டிருந்த அழகான வெள்ளை முயல்கள் தென்பட்டன. பேரம்கூடப்பேசாமல் நாலு முயல்குட்டிகளை வாங்கிக்கொண்டாள் லைலாக்காவுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. கையோடு கொண்டுசென்றிருந்த கூடையில் போட்டுக்கொண்டு ஓட்டமும் நடையுமாக வீடுவந்து சேர்ந்தாள். கேட்டைத்திறந்து உள்லே நுழைந்தவள் முயல்குட்டிகளைத் தரையில் ஓடவிட்டாள்.இவளும் முயல்குட்டிகளோடு செர்ந்து ஆடிக் குதூகலித்தாள். அடடா! முயல்குட்டிகளுக்குப் பசிக்குமே! உள்ளே ஓடிச்சென்று கொஞ்ச்ம் கேரட் எடுத்துவந்து முயல்களுக்கு சாப்பிடக்கொடுத்தாள். அவைகளோடு பேசவும் ஆரம்பித்தாள். அய்யோ மறந்துட்டேனே! “குட்டிகளா! உங்களூக்குப்பெயர் வைக்கணுமே! கொஞ்சமும் யோசிக்காம ரூபி; டூமி; டாமி; பாமி; என்று நாலு குட்டிகளுக்கும் கிடுகிடுவெனப்பெய்ர் வைத்துவிட்டாள்! இவை அத்தனையும் பக்கத்து பங்களாவிலிருந்து ரெண்டு பொறாமைக்கண்கள் கவனித்துக்கொண்டேயிருந்தன. இதையறியாத லைலாக்கா உள்ளெ போய் தண்ணீர் எடுத்துவரச் சென்றாள். சட்டென்று ஓடி வந்த பக்கத்து வீட்டுப்பெண் முயல்குட்டிகளை தூக்கிக்கொண்டு தன் வீட்டிற்குள் மறைந்துவிட்டாள். வெளியெ வந்து பார்த்த லைலாக்கா திடுக்கிட்டு அழ ஆரம்பித்தாள். …..அந்தசமயத்தில்தான் நமது குட்டிக்கதாநாயகி ரோஷ்னி கேட்டைத்திறந்து உள்ளே நுழைந்தாள்!!…….

இங்கே உங்களுக்கு ரோஷ்ணியைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். பார்க்க அழ்கும் தெய்வாம்சமும் நிறைந்த இந்தக் குழந்தை ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவள். பாட்டி தாத்தாவை பீப்பி_தாத்தூ என்று அன்புடன் அழைப்பாள். வீட்டிற்கு மிகமிக செல்லக்குழந்தை. தன்னுடைய பிரத்யேக குண்ங்களால் தெய்வாம்ச வரங்கள் சித்திக்கப்பெற்றவள்!……….(தொடரும்)

Advertisements