alagiri

அழகிரி மாறன் பற்றி நீரா ராடியாவிடம் சில சுவையான தகவல்களை இந்த டேப்பில் பறிமாறுகிறார் கனிமொழி…

– அழகிரி மாஸ் லீடர்… அவருக்கு மந்திரி பதவி தராமல் இருந்தால் அவரது ஆதரவாளர்கள் பொறுக்க மாட்டார்கள். இதை ஏன் காங்கிரஸ் புரிந்து கொள்ள மறுக்கிறது? அழகிரிக்கு ஏதாவது ஒரு துணை மந்திரி பதவி கொடுத்தால் தான் சரியாக இருக்கும்.

தயாநிதி மாறன்

– இன்னொரு சுவையான விஷயம் இதில்… தயாநிதி எப்படி தனக்குத்தான் டெலிகாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக காய் நகர்த்தினார் என்று இதில் சொல்லுகிறார்கள்…. அதாவது காங்கிரசுக்கு டி.ஆர்.பாலு இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பதவிக்கு வேண்டாம் … அதனால் ராசா தான் அதற்குத்தான் போக வேண்டும். அதனால் எஞ்சியுள்ள டெலிகாம் எனக்குத்தான் என்ற வகையில் டி.ஆர்.பாலுவுக்கும் காங்கிரசுக்கும் உள்ள வேறுபாட்டை வைத்து தனக்கு பயன் தேடுவது என ஒரு சின்ன பொலிடிகல் ஸ்கூப்பை நடத்தப் பார்த்திருக்கிறார் மாறன்! அதைப் பற்றி எரிச்சலுடன் விவாதிக்கிறார் கனிமொழி!

கேளுங்கள்! “அண்ணன் என்ன தம்பி என்ன” பாட்டை பாடிக் கொண்டே கேளுங்கள்!