• விழி சோழி உருட்டுகிறாய்..
  • ஒவ்வொரு முறையும்..
  • வீழ்வது நானன்றோ?
  • முதல் கட்டம்..
  • காய் வைத்து.. காத்திருக்கிறேன்..
  • அடுத்த கட்டம்..
  • ஆசைக்கட்டம்.
  • உயரக்கட்டம்..
  • உச்சக்கட்டம்.
  • உன் புன்னகை ஏணிகள்..
  • என் காதல் ஆசை ஏற்றுமோ?
  • இல்லை
  • அந்த மௌன சர்ப்பங்கள்..
  • என் வாழ்க்கையை விழுங்குமோ?
  • நான் இலக்கை..
  • தொடுவதும்..
  • விட்டு விடுவதும்..
  • உன் கையில்..
  • நீயோ..
  • படம் பார்த்து நகர்த்துகிறாய் காயை..
  • நானோ..
  • உன் முகம் பார்த்து நகர்த்துகிறேன்..
  • அணி எதிரெதிரென்றாலும்..
  • எனக்காய் நீயும்
  • உனக்காய் நானும்
  • ஆடுவதுதான் காதலன்போ?
  • உனக்கு புள்ளி விழுகையில்..
  • என் காய் நகர்கிறது..
  • பக்கம் வந்து ஆடேன்..
  • ஒரே பக்கம் வந்து ஆடேன்..
  • இது .. காதல் பரமபதம்..
  • மேலேறுதலும்..
  • கீழ் வீழுதலும்..
  • விளையாட்டாம்..
  • இதில் யாதொருவர் தோற்பதுவும்..
  • இருவருக்குமே வெற்றியாம்..
Advertisements