சேமியா கோஸ்:


முட்டைக்  கோஸ்

இது ஒரு வித்தியாசமான‌ ரெசிபி சாப்பிட மிகவும் சுவையான‌து.முத‌லில் சேமியாவை பொடித்து லேசாக எண்னையோ அல்ல‌து நெய்யொ சிறீதளவு விட்டு வ‌றுத்து கொள்ளவும் தேவைப்பட்டால் முந்திரிப்ப‌ருப்பு சேர்துக்கொள்ளவும். வறுத்த‌ சேமியாவையும் முந்திரிப்ப‌ருப்பையும் ஒரு பாத்திர‌த்தில் எடுத்து வைத்து விட்டு வாணலியில் வைத்து தாளீக்க கொஞ்சம் எண்னை விட விடவும். எண்னை காய்ந்த‌தும் கடுகு, உளுத்த‌ம் ப‌ருப்பு, க‌ட‌லை ப‌ருப்பு, தாளீத்த பின் பொடியாக‌ ந‌றுக்கிய வெங்காய‌ம், பச்சை மிளகாய், க‌ருவேப்பிலை போட்டு வ‌த‌க்க‌வும். வ‌த‌ங்கிய‌பின் பொடிதாக‌ ந‌றூக்கி வைத்துள்ள‌ முட்டைக்கோசை எடுத்துப்போட்டு இர‌ண்டு வ‌த‌க்கு வ‌த‌க்கிய‌பின் த‌ண்ணீர் தெளீக்க‌வும். 2,3 நிமிட‌ம் க‌ழித்த‌பின் முட்டைக்கோசுக்கு ந‌டுப்ப‌குதியில் ஒரு கிணறுபோல் செய்துகொள்ளவும். இத‌ற்கு முட்டைகோசை சுற்றிலும் ஒதுக்கிவிட்டு ந‌டுவில் ஒரு குழிமாதிரி செய்துகொள்ள‌வும். ந‌டுவில் உள்ள  குழிப்ப‌குதியில் வ‌றுத்து வைத்துள்ள சேமியாவைப் போட்டுக் கொஞ்ச‌ம் த‌ண்ணீர் தெளித்து சேமியாவின் மேல் சுற்றிலும் உள்ள முட்டைக் கோசை போர்வை போர்த்துவ‌து போல் மூடிவிட‌ வேண்டும். கொஞ்ச‌ம் தண்ணீர் தெளிக்க‌வும். ஒரு 5 நிமிட‌ம் க‌ழித்து திறந்து தேவைக்கேற்ப‌ உப்பு சேர்த்துக் கிளறிவிட ‌வேன்டும். முட்டைக்கோசும் சேமியாவும் வெந்துவிட்ட‌தா என்று பார்க்க‌ வேன்டும். வேக‌வில்லை யென்றால் இன்னும் சிறீது த‌ண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இறக்கும் த‌றுவாயில் கொஞ்ச‌ம் தேங்காய்ப்பூ கொத்த‌ம‌ல்லித்த‌ழை சேர்த்துக்கிளறி இறக்கிவிட‌ வேண்டும். இது சாத‌த்திற்கு தொட்டுக் கொள்ளவும் மாலை டீயுட‌ன் சாப்பிட‌வும் ஏற்றது. குழந்தைக‌ள் விரும்பி சாப்பிடுவார்க‌ள். மிக‌வும் ச‌த்தான‌தும்கூட!

_________________________________________________________________________________________

Advertisements