பல்கலைக்கழக மானியக்குழு[UGC]பாடதிட்டத்தின்படி எழுதப்பட்ட சூழலியல் கல்விஎன்னும் நூல் அனைத்துக்கல்லூரி மாணவர்களுக்கும் பயன்படும் சிறந்த நூல்.சுற்றுச்சூழல் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்ப்பதற்கு பல்துறை சார்ந்த அணுகுமுறை அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.எளிமையான தமிழில் அறிவியல் கருத்துக்களை தெளிவாக எழுதியுள்ள ஆசிரியர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.சூழலியலின்  அனைத்து பரிமாணங்களையும்  அழகுற விளக்குகிறது இந்நூல்.சுற்றுச்சூழலின் பன்முகத்தன்மையை புரிந்துக்கொண்டு, அதனை பாதுகாத்து, நமது தலைமுறையினருக்கு தூய்மையான சுற்றுச்சூழலை விட்டுச்செல்ல இந்நூல் உதவும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
அறிவியல் உட்பட அனைத்துப்பாடங்களையும் தாய் மொழியில் கற்க அரசு ஊக்கப்படுத்தும் இவ்வேளையில் இந்நூல் தாய்த்தமிழில் வெளிவந்திருப்பது குறிப்பிடதக்கது.மாணவர் மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல்
பாதுகாப்பில் ஆர்வமுள்ள அனைவரும் படித்து பயன் பெறலாம்.
ஆசிரியர்கள்: முனைவர்.சி.சேதுராமன்
முனைவர்.ச.அறிவொளி.
பதிப்பகத்தார்:பாவை.

diet-b

Advertisements