தேவையான பொருட்கள்:

கேப்பை மாவு-3உழக்கு

உளுந்து -1/2உழக்கு

உப்பு-தேவையான அளவு.

செய்முறை:

*உளுந்தை 1/2 மணி நேரம் ஊற வைத்து,அரைத்து வைத்துக்கொள்ளவும்.

*உளுந்து மாவுடன்,கேப்பை மாவை கலந்து,உப்பு போட்டு,இட்லி மாவு பதத்திற்கு முதல் நாள் இரவே கரைத்து வைக்கவும்.

*அடுத்த நாள் இட்லி போல் ஊற்ற வேண்டியது தான்.

*பஞ்சு போல் ,அருமையாக இருக்கும்.மிளகாய் துவையல் இதற்கு சரியான combination.

*தோசையாகவும் ஊற்றலாம்.

*கால்சியம் சத்து நிறைந்தது.

diet-bAdvertisements