ஒவ்வொரு முறையும்

உன்னிடம் சொல்லி விட எத்தனிக்கும் வார்த்தைகள்

எப்போதும் போல் இப்போதும்

இதழ் தாண்ட முடியவில்லை..

நெஞ்சப் பெரு வெளியில்

கூர் ஆணிகள் கொண்டு

அறையப்பட்டுத் தொங்கும்

அவற்றிலிருந்து வெளிப்படும் திரவத்தின் நிறம் பற்றியும்

எதுவும் திட்டவட்டமாய் கூறி விட முடியாது!

ஆனால் உனக்கான கீறல்கள் உண்டென்னில் பத்திரமாய்…

ரணங்களின் ஈரத்தில் ஒட்டிக்கொண்டுள்ள அவற்றைப் பற்றி

ஏதும் அறியாமல் வழமையே போல் கூர் தீட்டிக் கொண்டு இம்முறையும் நீ….!

…ஷஹி…

Advertisements