முதலாம் இராஜராஜன் கி.பி.985 முதல் கி.பி.1014 வரை முப்பது ஆண்டுகள் சோழ நாட்டின் பேரரசனாக விளங்கினான். புவியோர் போற்றும் வகையில் இராசராசன் தன் பெயரில் இராஜராஜேஸ்வரம் என்ற சிவாலயத்தை தஞ்சையில் கட்டினான்.கி.பி 1004இல் ஆரம்பிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோயில் கி.பி 1010இல் கட்டிமுடிக்கப்பட்டது. இக்கோயில் 793 அடி நீளமும் 397 அடி அகலமும் ,216 அடி உயரமும் உடையது.

தஞ்சை பெரிய கோயிலை சுற்றியுள்ள திருமதில் இராஜராஜனின் சேனாதிபதி கிருஷ்ணன் இராமனால் கட்டப்பட்டது. இக்கோயிலுக்கு நான்கு புறங்களிகலும் வாயில்கள் உண்டு.கோபுரங்களுடன் உள்ளன.முதல் வாயில் இராஜராஜன் திருவாயில் என்றும் அடுத்தது கேரளாந்தகன் திருவாயில் என்றும் அவனால் பெயரிடப்பட்டன.

வானுயர்ந்த கோபுரம்,பெரிய கருவறை,மிகப்பெரிய லிங்கம்,அழகிய பெரிய நந்தி என்று அனைத்துமே இராசராசனின் உள்ளத்தைப் போல மிகப்பெரியது.தோற்றத்தால் மட்டுமில்லாமல் சூட்டிய பெயர்களும் பெரிது.பெரிய கோயில்,பெருவுடையார்,பெரிய நந்தி,பெரிய கோபுரம்,பெரும் சுற்று என்று மொத்தத்தில் மிகப்பெரிய கோயில்.

பெரிய கோயிலைக் கட்டிய தலைமைச்சிற்பி:

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய தலைமைச் சிற்பி  ” வீரச்சோழன் குஞ்சர மல்லனான இராஜராஜ பெருந்தச்சன்” என்பவனாவான்.  சிற்பச்சிறப்பின் சிகரமாக,திராவிட கட்டடக்கலையின் சான்றாக,காலத்தை வென்று இன்றளவும் உலகப் புகழ்பெற்று நிற்கும் பெரிய கோயிலை எடுப்பித்த சிற்பி”வீர சோழ குஞ்சரமல்லன்”உலகிலேயே தலை சிறந்த சிற்பி .எவ்வித பொறியியல் வளர்ச்சியும்,வசதியும் இல்லாத காலத்தில் இச்சாதனையை நிகழ்த்திக்காட்டியசிற்பியையும்,மன்னன் இராசராசனையும் தலை வணங்குவோமாக.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் வெளியிடப்பட்ட” “இராசராசன்” என்னும் நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.

diet-b

Advertisements