ஹைய்யோ, கோர்ட்டு; ஹைகோர்ட்டு!—குனுக்கம்மாவின் துணுக்கு!


ஒரு முக்கிய செய்தி ! தமிழ் நாடு-பார் கவுன்சில் தலைவர் சந்த்ரமோகனை ஹைகோர்ட்டு அதிரடியாக “சஸ்பெண்டு” செய்துள்ளது.ஹைகோர்டு நீதிபதி ஆர்.ரகுபதி அவர்கள் ” முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த டாக்டர் ஒருவருக்கு சாதகமாக தீர்ப்பளிக்கும்படி மத்திய மந்திரி ஆ.ராசாவின் பெயரைப் பயன்படுத்தி பார் கவுன்சில் தலைவர் சந்திரமோகன் தன்னை நிர்ப்பந்தம் செய்தார்” என்ற ஒரு குற்றச்சாட்டை வெளியிட்டார். இப்படிப்பட்ட செயல்கள் நீதிமன்றத்தின் ஒட்டுமொத்த கௌரவத்தையும் கவிழ்த்துவிடும் என்பதனால் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சில் தலைவர் பதவியில் இருந்து சந்த்திரமோகன் சஸ்பெண்டு செய்யப்பட்டிருக்கிறார் நீதிமன்றத்தின் கவுரவம் காப்பாற்றப்பட்டது ,வரவேற்கத்தக்கது. முன்னாள் மந்திரிக்கு நேரம் சரியில்லையா, என்ன?

**********************************************************

Advertisements