உலகின் முன்னனி குளிர்பான நிறுவனங்களில் ஒன்றான பெப்சியின் தலைவர் மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி இந்திராநூயி அக்டோபர் 28 இல் 1995 சென்னையில் பிறந்தார்.

கறுப்பு புடவையில் இருப்பவர் இந்திரா…

அவருடைய தந்தையின் பெயர் கிரிஷ்ணமூர்த்தி, தாயார் திருமதி. சாந்தா கிரிஷ்ணமூர்த்தி. சென்னை ஹோலியேஞ்சல்ஸ்  பள்ளியில் படிப்பை முடித்து மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் வேதியியல் பாடத்தில் இளங்கலைப் பட்டமும் ,கல்கத்தாவிலுள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் MBA பட்டமும் பெற்றார்.  இவருடைய கணவர் திரு.ராஜ் நூயி,

மகளுடன் இந்திரா…

பெண்களின் பெயர் பிரீத்தா மற்றும் தாரா.  போர்பஸ் பத்திரிக்கை அதன் 2008 ஆம் ஆண்டிற்கான உலகின் 100 வலிமையான பெண்களில் இந்திராவை மூன்றாவது நபராக மதிப்பிட்டது. ஃபார்ச்சுன் பத்திரிக்கை அதன் 2006, 2007, 2008 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் வணிகத்தில் மிகவும் வலிமையான பெண்கள் மதிப்பீட்டில் நூயியை முதல் இடத்தில் வைத்திருந்தது.

ஒபாமாவுடன்…..

யு. எஸ் நியூஸ் அன்ட் வேர்ல்ட் 2008 ஆம் ஆண்டு நூயியின் பெயரை அமெரிக்காவின் சிறந்த தலைவர்களில் ஒருவராக வெளியிட்டது.  லிங்கன் சென்டர் ஃபார் தி பெர்ஃபார்மிங்க் ஆர்ட்ஸ் , நூயி சர்வதேச மீட்புக் குழு , கேட்டலிஸ்ட் ஆகிய அமைப்புகளின் உறுப்பினராக உள்ளார்.

யாலே கார்பரேஷனின் தொடர் ஆய்வாளராகவும் டிரஸ்டீஸ் ஆஃப் ஐ செநோலர் ஃபெலோஷிப்ஸின் போர்ட் உறுப்பினராகவும் அமெரிக்க இந்திய வணிக கவுன்சிலின் தலைவராகவும் சேவையாற்றுகிறார். 2007 ஆம் ஆண்டு ,

மன்மோஹன் சிங்குடன்….

அவர் இந்திய அரசாங்கத்தின் பத்ம விபூஷன் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டார். 2008 ஆம் ஆண்டு அமெரிக்கன் அகாடெமி ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸஸின் ஃபெலோஷிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2008 ஆம் ஆண்டு பெப்சிகோவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கையில் இந்திரா நூயி பெற்ற சம்பளம் $ 14, 917,701 ஆகும். நூயியின் வழிநடத்தும் திறன், கடுமையான மற்றும் இதயபூர்வமான உழைப்பு மற்றும் நகைச்சுவை உணர்வு ஆகியவையே அவரின் மாபெரும் வெற்றியின் ரகசியம் என்று சொல்லப்படுகிறது. அவர் தலைமைப் பதவி ஏற்றதிலிருந்து பெப்ஸியின் வருமானம் 72 சதவிகிதம் உயர்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த , இந்தியாவில் பிறந்து வளர்ந்து ,படித்த ஒரு பெண்மணி

உலகின் பவர்ஃபுல் பெண்களின் புகைப்படத்தில் இந்திரா

உலகமெலாம் வியந்து அதிசயிக்கும் வண்ணம் உயர்ந்து நிற்கிறார். பெருமை கொள்கிறோம்.

…ஷஹி…

படங்கள் மற்றும் தகவல் இணையத்திலிருந்து…

Advertisements