ஒரு முத்த முள்ளால்

என் மொத்த நரம்புகளையும்

சேர்த்துத் தைத்து விட்டு

எதிர்வினை இல்லையென்று

ஏக்கப்படுகிறாய்?

உறைந்து போன உதிரம் சற்றே சூடேர

இன்னும் ஒன்றே ஒன்று கொடு!

கடனையெல்லாம்

உடனுக்குடன்

திருப்பி விடுதல்

தான்

என் வழக்கம்!

..ஷஹி..

Advertisements