விஜய் சூர்யா

விஜய் அப்போது பத்து படங்கள் நடித்த நடிகர். சூர்யா அதுவரை எந்த படத்திலும் நடித்ததில்லை. வசந்த் இயக்கத்தில் 1997ம் ஆண்டு வெளிவந்த நேருக்கு நேர் படத்தில் சூர்யா என்ற புதுமுக நடிகருடன் நடிக்க விஜய் எந்த தயக்கமும் காட்டவில்லை. அதில் விஜய் என்ற முன்னணி நடிகர் சூர்யா என்ற புதுமுக நடிகருடன் இரண்டு ஹீரோ சப்ஜக்டில் நடித்தது பல புருவங்களை உயர்த்தியது. ஆனாலும் விஜய் அதில் நடிக்க காரணம் சூர்யா தன் லயோலா கல்லூரி நண்பன் என்பதாலேயே ! அந்த படத்தில் வசந்தும் தன் பங்கிற்கு விளையாடினார். ஹிட்டான பாடல்களை சூர்யாவுக்கு தந்து சிம்ரனை சூர்யாவுக்கு ஜோடியாக போட்டு நல்ல நல்ல சீன்களை சூர்யாவுக்கு ஒதுக்கி… இப்படி பல விஷயங்கள் அந்தப் படத்தில் விஜய்க்கு எதிராகவே நடந்தன. ஆனாலும் விஜய் அதில் நட்புக்காக நடித்தார்….

காலங்கள் ஓடின…நான்கு வருடங்கள் கழித்து விஜய் லவ் டுடே, காதலுக்கு மரியாதை,  போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்த , தனியாக ஹிட் கொடுக்க முடிகிற ஸ்டார்…சூர்யாவோ திரையுலகில் நான்கு வருடங்கள் இருந்தும் கூட ஹிட் கொடுக்க முடியாமல திணறிக் கொண்டிருந்தார்… அவர் கேரியரே முடிவுக்கு வந்து விடுமோ என்ற நிலையில் அவருக்கு ஒரு மாஸ் படம் தேவைப்பட்டது. அப்போது தான் ஃப்ரண்ட்ஸ் படம் ப்ளான் செய்யப்பட்டது. அதில் விஜய்க்கு செக்ண்ட் ஹீரோவாகும் வாய்ப்பு சூர்யாவுக்கு கிடைத்தது. விஜய் நினைத்திருந்தால் சூர்யாவை புக் செய்ய வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம். தயாரிப்பாளர் கேட்டிருப்பார். ஆனால் நேருக்கு நேர் ஏற்படுத்திய கசப்பான அனுபவத்திற்குப் பிறகும் விஜய் மீண்டும் சூர்யாவுடன் இணைந்து நடித்தார். நட்புக்காக…

விஜய் டிவி அவார்ட்ஸ் வருடா வருடம் நடக்கும் கோலிவுட் கொண்டாட்டம்… இதில் விஜய்க்கு “பாப்புலர் ஆக்டர்” என்ற அவார்ட் கொடுத்தார்கள்… ஆனால் அந்த அவார்டை விஜய்க்கு தந்தது சூர்யா… இரண்டு பேரும் சமகால நடிகர்கள்… இருவரில் சீனியர் விஜய்… விஜய்க்கு கமல் கையாலோ ரஜினி கையாலோ அவார்ட் கொடுத்தால் அது நியாயம்… ஏன் விகரம் கையால் கூட கொடுத்திருக்கலாம் … அவர் சீனியர்… ஆனால் விஜயை விட ஜூனியரான சூர்யாவின் கையால் விஜய்க்கு அவார்ட்! விஜய் நினைத்திருந்தால் அதை தவிர்த்திருக்கலாம்… அவமானம் என்று விலகியிருக்கலாம்.. ஆனால் விஜய் அந்த அவார்டை ஏற்றுக் கொண்டார்..நட்புக்காக….

விஜய் சூர்யா

தற்போது அரசியல் காரணங்களுக்காக பல்வேறு போர்வையில் விஜயை த்ரீ இடியட்ஸ் படத்திலிருந்து நீக்குகிறார்கள்…. அந்த படத்தில் விஜயின் ரோலை ஏற்பதற்கு சூர்யா தயக்கம் காட்டவில்லை… உடனே ஏற்றுக் கொள்கிறார்… ஷங்கர் விஜய்க்கு நிகரான கதாநாயகன் கிடைக்கவில்லையெனில் நான் விலகுகிறேன் என்றார்… அந்த ப்ரஷரை அப்படியே மெயின்டெயின் செய்திருந்தால் கூட அரசியல் காரணங்கள் அமுங்கிப் போய் விஜய் த்ரீ இடியட்ஸீல் நடித்திருப்பார். ஆனால் சூர்யா இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதன் மூலம் விஜய்க்கு எதிராக ஒரு அடி எடுத்து வைத்திருக்கிறார். சூர்யாவுக்கு இல்லாத வாய்ப்புகளா? கௌதம், முருகசாமி என்று பலர் சூர்யாவுக்காக காத்திருக்கிறார்கள். அவர் நினைத்திருந்தால் நண்பனுக்காக இந்த வாய்ப்பை நிராகரித்திருக்கலாம்.. ஆனால் சூர்யா அப்படி செய்யவில்லை….

இது சரியா சூர்யா?

Advertisements