SHANKAR VIJAY 3 IDIOTS

த்ரீ இடியட்ஸ் என்ற அமீர்கான் நடித்த வெற்றிகரமான ஹிந்தி படத்தினை தமிழில் ரீமேக் செய்ய முடிவாகி அதை ஷங்கர் இயக்குவார் எனவும் அதில் அமீர்கான் ஏற்ற கதா பாத்திரியத்தில் விஜய் நடிப்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால் திடீரென்று ஷங்கர் தரப்பிடமிருந்து “விஜய்க்கு பதில் த்ரீ இடியட்ஸில்” சூர்யா நடிப்பார் என்ற தகவல் வந்தது. இதற்காக ஹேர்ஸ்டைல் மாற்றம்… விக் வைப்பது போன்ற சில்லியான காரணங்கள் சொல்லப்பட்டாலும் உண்மையான காரணம் அரசியல்தான்…

கடந்த சில காலமாகவே ( குறிப்பாக வேட்டைக்காரன் முடிந்த பிறகே ) விஜய்க்கு தலைவலி ஆரம்பித்தது. சன் பிக்சர்ஸ் மூலம் சில ப்ரஷர்கள் வந்தன…முக்கால்வாசி … படங்களுக்கு ஒப்பந்தம் செய்வதிலும் அதில் இன்வால்வ் ஆன “ப” விடமின் பற்றியதும் தான்.  விஜய் முரண்டு பிடித்தார்… சன் விஷயத்தை மேலிடத்திடம் கொண்டு போனது. மேலிடத்திடமிருந்து சன் பிக்சர்சுடன் ஒத்துழைக்கும்படி அன்பான மிரட்டல் வந்தது. ஆனால் விஜய் அதையும் செவி சாய்க்காமல் தன் மன்றங்களைக் கூட்டினார். எஸ்.ஏ.சந்திரசேகர் ஜெயலலிதாவை சந்தித்தார். விஜய் சீக்கிரம் அதிமுகவில் இணைவார் என்ற செய்தி பரவியது. இதனால் கோபமான மேளிடம் விஜய்க்கு எதிராக பல விதங்களில் செய்ல்களை முடுக்கியது. அதில் ஒன்றுதான் “த்ரீ இடியட்ஸ்” சிலிருந்து விஜய் நீக்கம்…..

ஷங்கர் மாதிரி பெரிய இயக்குநர்கள் கூட “சூரியன்” ஆக்ரமிப்புக்குள் இருப்பதே இன்றைய தமிழ் திரையுலகின் நிதர்சன உண்மை.