நாலாவது பீரை அடித்தும் கூட சுரேஷிடம் வழக்கமான கலகலப்பில்லாததை கவனித்தான் பிரேம்…

“என்ன மச்சான்… என்ன டல்லா இருக்கே? ”

சுரேஷ் சிகரெட்டை இழுத்து விட்டபடி மௌனம் காத்தான்…

“ஓஹோ… லவ்வா மச்சி… சொல்லவே இல்லையே…யாரு?”

“எங்க ஆஃபீஸ்ல… கொலீக்…”

“சூப்பர்டா… என்ன ஸ்டேஜ்?”

“இல்லடா … இப்பத்தான் ஸ்டார்ட் ஆயிருக்கு… ரொம்ப சின்சியரா லவ் பண்றா…”

“அட அவளுங்க எல்லாம் அப்ப்டித்தான்… சரி நீ மேட்டருக்கு வா… எங்கயாவது கூட்டிப்  போனியா?”

“இல்லடா அவ அப்படி பட்ட பொண்ணு இல்ல!”

“அட… என்ன மச்சான் நீ… நம்மகிட்டயேவா… ட்ரை பண்ணுப்பா?”

சுரேஷ் யோசித்தான்…

“இங்க பாரு சுரேஷ்… வீக் எண்ட் மகாபலிபுரம் கூட்டிப் போப்பா.. எல்லாம் ஓகேயாகும்!”

ஒரு விஷம சிரிப்புடன் பிரேம் சொல்ல சுரேஷ் கேட்டுக் கொண்டிருந்தான்…

——————————————————————————————————

“என்ன மச்சான் , எப்படி இருந்தது வீக் எண்ட்?”

“டேய் சூப்பர்டா! ஓகேயாயிடுச்சு! ஆனா….”

“ஆனா என்னடா… அதான் கலக்கிட்டல்ல!”

“அதில்லடா.. அவ ரொம்ப சீரியசா இருக்குறா… அன்னிக்கே எல்லாம் முடிஞ்சப்புறம் ஓன்னு அழுது கல்யாணாம் பண்ண சத்தியமெல்லாம் வாங்குனா… பேசாம அவளையே கல்யாணம் பண்ணலாமான்னு யோசிக்குறேன்..!”

“டேய் மச்சி… உனக்கு என்ன பைத்தியமா.. மேட்டர முடிச்சமா.. அடுத்த ஃபிகரப் பாத்தமான்னு இல்லாம…”

“இல்லடா… இவள எப்படி விடுறது?”

“ஆங்க் அப்டி கேள்… இவள கழட்டி விட நான் ஐடியா கொடுக்கறேன்… நீ என்ன பண்ற ஆஃபீசுக்கு ஒரு அஞ்சு நாள் லீவு போடு… ஆறாவது நாள் தாடியோட போ… எனக்கு நெஞ்சு வலி செக்கப் போனா டாக்டர் எனக்கு ஹார்ட் வீக்குண்டாரு நான் கல்யாணமே பண்ணக் கூடாதாம்னு சொல்லி ஒரு அல்வா கொடுத்துட்டு வந்துடு!”

————————————————————————————————————————————

நண்பர்கள் இருவரும் இரண்டு மாதம் கழித்துத்தான் மீண்டும் சந்தித்தனர்…

“என்ன மச்சான்… அந்த ஃபிகர கழட்டி விட்டுட்டியா?”

“ஆமாண்டா பிரேம்.. உன் ஐடியா சூப்பரா ஒர்க் அவுட் ஆயிடுச்சி… சூப்பரா அல்வா கொடுத்துட்டேன் அப்படியே நம்பிட்டா… இப்ப அவங்க வீட்டுல அவளுக்கு வேற எடத்துல கல்யாணமே ஃபிக்ஸ் பண்ணிட்டாங்க… இன்விடேஷன் கொடுத்திருக்கா!”

சுரேஷ் நீட்டிய இன்விடேஷனை பிரேம் வாங்கினான்… அது அவன் கல்யாணப் பத்திரிக்கை…

அவனுக்கு கல்யாணம் பிக்ஸ் செய்து விட்டு  அவன் கோடீஸ்வர தந்தை சொன்னது மனதில் ஓடியது…

“டே மவனே பிரேமு… இதோட நான் பாத்த நாலு பொண்ண தட்டி கழிச்சுட்ட இப்ப உன்னக் கேட்டுத்தான் இந்த கல்யாணம் ஃபிக்ஸ் பண்றேன்….இந்தப் பொண்ண எதுனா கதகட்டி கல்யாணத்த கேன்சல் பண்ணி எனக்கு அல்வா கொடுக்க பாத்த…. என் சொத்துல ஒரு காசு கிடைக்காது!”

“எப்டி மச்சான் நம்ம அல்வா?” சுரேஷ் கேட்க பிரேம் மென்று விழுங்கினான்…..

——————————————————————————————————-

Advertisements