ஏ.ஆர்.ரஹ்மான் 127 ஹவர்ஸ்

ஏ.ஆர்.ஆருக்கு இன்னொரு அகில உலக மகுடம் தயாராகிவிட்டது… ஆமாம் சென்ற வருடம் க்ளோப் விருதையும் பின்னர் ஆஸ்கர் விருதையும் வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் இந்த முறையும் க்ளோப் விருதிற்காக நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார். ஸ்லம் டாக் மில்லியனர் என்ற படத்தின் இசைக்காக ஏ.ஆர்.ஆர் இரண்டு ஆஸ்கர் பரிசுகளை வென்றார்… ஆனால் அதற்கெல்லாம் முன்னோடியாக இருந்தது க்ளோப் விருதுகள். வருடா வருடம் க்ளோப் விருதுகள் பெற்றவர்கள் ஆஸ்கார் விருது வெல்ல வாய்ப்புகள் அதிகம்.

ஸ்லம் டாக் மில்லியனர் படத்தை இயக்கிய டேனி பாயில் 127 ஹவர்ஸ் என்ற படத்தை அடுத்து இயக்கினார். இந்த வருடம் 127 ஹவர்ஸ் படத்தின் இசைக்காக ஏ.ஆர்.ஆர் க்ளோப் அவார்டுகளுக்காக நாமினேட் ஆகியிருக்கிறார். இவர் நாமினேட் ஆன பிரிவு “ஒரிஜனல் ஸ்கோர்” என்ற பிரிவு. இந்தப்படத்தில் “இஃப் ஐ ரைஸ்” என்ற பாடலை பாப்ஸ்டார் டிடோவுடன் இணைந்து உருவாக்கியிருக்கிறார்.

அண்மையில் ஒஸ்லோவில் நடைபெற்ற நோபல் பரிசு வழங்கும் விழாவிலும் ஏ.ஆர் ரஹ்மான் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சியை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியாவிற்கும் தமிழர்களுக்கும் மேன்மேலும் பெருமை சேர்க்க மூன்றாம் கோணம் வாழ்த்துகிறது!

[stextbox id=”alert”]

உங்களுக்கு தெரியுமா? மூன்றாம் கோணத்தில் லாகின் செய்யாமலே கமென்ட்ஸ் போடலாம்!

[/stextbox]

Advertisements