அடிமைப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக பேசுகிறார் கனிமொழி இங்கனம்,

அச்சம் மடம் என்ற தலைப்பில்,

“…..தூக்கத்தில் துணி விலக

தடிப்பயல் என்றார்கள்,

நளினங்கள் தேடி வரித்துக் கொண்டேன்.

மாலை மசிவதற்குள் கூடடையாவிட்டால் கற்புக்குக் களங்கம்..

வாசல் தாண்டுவதைக் குறைத்துக் கொண்டேன்.

அறிவைவிட அடக்கமே அணிகலன்;

அடங்கிப்போனேன்.

கைத்தலம் பற்றிய கணவனின் கண்களில் கனவுகளைத் தேக்கினேன்.

அவை நிறம் மாறுவது கண்டு திகைத்துப் போகிறேன்.

வரையப்பட்ட வட்டத்துக்குள் நானே உருவாக்கிய அறைக்குள் இருந்தபடி.”

“கருவறை வாசனை “ என்ற தலைப்பின் கீழ்

“…சட்டாம்பிள்ளையாய் அம்மா,

சிறைகாவலராய் அப்பா,

அறிவுச் சலவைக்குப் படிப்பு,

கைகொட்டிச்சிரித்து அடக்கி வைக்க சுற்றம்,

சிலுவையின் ஆணி தகர்த்து இறங்கி வந்தால்

கையில் தாலிக் கயிற்றோடு கணவன்.

உன் கருவறைக்குள் மற்றொரு அடிமை.”

முத்தாய்ப்பாய்…

“… வன்புணர்வில்

புழை கிழிந்து

கதறும் சிறுமியைபோல் மருண்டு அழுகிறேன்

இருண்மையின் இருள் சூழ்ந்த பகல் பொழுதுகளில்”

என்று அவலத்தின் உக்கிரத்தை உலகறியச் சொல்கிறார்.

மேலும்…

” உன் வார்த்தைகள் பிறப்பது உன்னில் இருந்தல்ல..

என் பேதமைகளின் இருண்ட சூழல்களில்…”

“எனக்கென்று கண்களோ ,

செவிகளோ ,

கால்களோ இல்லை .

அவ்வப்போது நீ இரவலாய்த் தருவதைத் தவிர”

“….என்னுடைய அக்னிப்பிரவேசம்

என் கற்பை நிரூபிக்க அல்ல

நீ தொட்ட கரைகளைக் கழுவ.”

என்னும் வரிகளில் தெரிக்கும் குமுறல் சமூகம் குறித்ததா அல்லது எதிர்பாலினம் குறித்தா?

‘ வழக்கமாய் விடிந்த ஒரு காலையில்’ என்ற ஓர் கவிதையின் வரிகள்

“… அவரவர் போக்கில்

அவரவர் போயினர்

என் மழித்த முகத்தைப் பார்க்கவே இல்லை”

” இருபது வருடம் கழித்து

பார்ட்டியில் பார்த்து

என் பக்கத்து வீடா நீங்கள்

என வினவும் வாழ்க்கை…”  என்று உலகத்தின் ஊக்கமின்மையை பேசுகிறார்.

நல்ல நேர்த்தியும் ஆழமும் உடைய அழகான கவிதை ஒன்று ….

” அவன் எப்போதும் இங்கேதான் இருப்பான்

எத்தனையோ ஆண்டுகளாகக் கடந்து போகிறேன் அவனை

கண்கள் சந்திக்கும் போது

அரைப்புன்னகையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்

அவன் இல்லாது போன தினத்திலிருந்து

எல்லோரையும் கேட்கிறேன்

அவனை யாரென்று”

‘கசகசத்த நகரம்’ பற்றி

” ….சரவணபவனுக்கும்

பீட்ஸா கார்னருக்கும்

இடையே

பிசிறில்லாமல்

ஊடாடும் வாழ்வில்

இதமாய் ஏந்தும்

இந்த சந்தடி மிகுந்த காங்கிரீட் நகரத்துள்

தொலைந்து போகிறேன்,

கூடு வந்து சேர்ந்த ஒரு சிறு பறவையின் அமைதியுடன்”

. ‘எப்போதாவது யாரையாவது’

என்ற கவிதையில்

” நேசிக்காமல் இருந்ததில்லை.

நேசித்ததைத் தொடர்ந்து நேசித்ததும் இல்லை.

நேசிக்கத் தொடங்கியவர் நேசித்தவராகவே இருப்பதும் இல்லை.

நேசிக்காமல் வாழவும் தெரியவில்லை”

என்று யதார்த்தம் பேசுகிறார்.

(அபி போன்ற சான்றோருக்குப் புரியும் என்ற நம்பிக்கையுடன்..)

…ஷஹி…

படங்கள் நன்றி கூகுள்..

Advertisements