குறள் இரண்டடி தான் …

முழுவதுமாய்த் தரவில்லையா பொருளை?

மலரவில்லை என்பதால் மட்டும் மொட்டுக்கள் அழகில்லையா?

புள்ளிகள் வைத்துவிட்டு கோடிழுக்காமல் பார்..

கோலம் போல அதுவும் கூடப் பேரழகு தான்.

முழுவதுமாய்ப் பெய்து தீர்த்தால் தானா மழை?

தூறல் தருமே தனி சுகம்!

பயணித்த ஊர் போய் சேர்தல் தானா வெற்றி?

பயணமே தருமே பற்பல இன்பம்!

சிகரம் தொட்டு விடுதல் சிறப்பு தான்…

மணல் வெளிக்கும் கூட மாட்சிமை உண்டே!

என் வாழ்நாள் முழுமைக்கான வசந்தமாக இல்லாவிடினும்…

தோன்றி மறையும் ஒரு…………..

வானவில்லாகவேனும் வந்து விட்டுப் போ.

..ஷஹி..

Advertisements