ஆழ்ந்த இருளில்,அமிழ்ந்திருந்தேன் கனவில்..

காணக்கிடைக்காத காட்சிகள் பல கண்டேன்,

சிலிர்த்தது உடலொடு மனமும்..

புறவுலகின் வெம்மை உறைத்ததும்..

விழித்தனன் தலைஉலுக்கி,

உதறினேன் முறுவலெல்லாம்.

பின் …

எப்போதும் போல் அணிந்தேன்,

முகத்தில் ஓர் மூடி!

..ஷஹி..

Advertisements