அழகான இந்திய ராணி

விழியில் பாண்டியம்
நகத்தில் சோழம்!
அமைப்பில் பல்லவம்!
சேரத்து செருக்கு மட்டும்
சேலைக்குள் அடைக்கலம்!

மொழியில் கவிநயம்!
பாட்டில் குயில்நயம்!
எழுத்தில் ஓவியம்!
கூடலில் மட்டும் ஏன்
நாணத்தின் தடைக்களம்?

நடையோ நாட்டியம்!
நல் சிரிப்போ மணிச்சரம்!
உடையோ மலர்ச்சரம்!
இடையில் மட்டும் ஏன்
இத்தனை சிக்கனம்?

கண் வீச்சோ பட்டியம்!
நான் உன்னில் ஐக்கியம்!
இங்கு மன்னரோ ஆயிரம்! ஆனால்
எனக்கு மன்னாதி மன்னி
நீ தான் முக்கியம்!

Advertisements