குளிர்காலத்தில் சருமம் வறண்டு, பொலிவிழந்து போகும். இதை வீட்டிலேயே சரி செய்யக்கூடிய அழகுப் பாதுகாப்பு முறைகள் பார்ப்போமா….

1. 4 அல்லது 5 துளிகள் ஜஜோபா எண்ணையுடன், அதே அளவு தேங்காய் எண்ணையும், பன்னீரும் கலந்து குளித்த பின்னும் முகம் கழுவின பின்னும் தடவிக் கொள்ளலாம். இது சருமத்துக்கு ஈரப்பதம் மட்டுமல்லாமல் இனிமையான நறுமணத்தையும் கொடுக்கும்.

2.சரி அளவு கிளிசரினும் பன்னீரும் கலந்து கொண்டு சில துளிகள் எலுமிச்சைச் சாறும் சேர்த்து உபயோகித்தால், உலர்ந்த வெடிப்புகள் நிறைந்த சருமத்தை சரி செய்வதோடு, முகத்துக்கு பளபளப்பையும் கொடுக்கும். கரும் புள்ளிகள் அறவே நீங்கும்.

3. பாதாம் பொடி, பால் பவுடர் , கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு சம அளவு கலந்து கொண்டு வாரம் ஒரு முறை உபயோகித்தால், வாரம் முழுமைக்கான பாதுகாப்பு கிடைக்கும்.

எலுமிச்சை சாறும் ஆலிவ் எண்ணையும் மிகப் பழமையான சருமப் பாதுகாப்புக்கான கலவை. ஆலிவ் எண்ணை சருமத்தை சீர் செய்யும், எலுமிச்சையின் C விட்டமின் ஈரப்பதம் அளிக்கும்.

4. இரவில் உறங்கச்செல்லும் முன் மயோனைஸ் தடவிக்கொள்வதால் முகம் மற்றும் கழுத்திலிருந்து வெய்யிலால் ஏற்பட்ட கருமை அகலும்.

5. சோற்றுக்கத்தாழை சேர்த்து தயாரிக்கப்படும் கிரீம் ஈரப்பதம் தருவதோடு சுருக்கங்களில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கும்.வறண்ட சருமம் , முழங்கைகள், காய்ந்த உதடுகள், வெய்யிலால் கருத்த முகம் அனைத்தும் நலம் பெறும்.

6. லிபிட் மற்றும் விட்டமின்கள் நிறைந்த தேங்காய் எண்ணை, சருமத்தை மென்மையாக்கும். கோகோ பட்டர் சேர்த்தால் வெயிலால் உண்டாகும் கருமை, மற்றும் குளிர் காற்றில் இருந்தும் பாதுகாக்கும்.

..ஷஹி..

நன்றி..கூகுள் மற்றும் 1.12.2010 தேதியிட்ட குட் ஹவுஸ்கீப்பிங்க்..

Advertisements