மீன் இனிய சுவையும் மணமும் கொண்ட உணவு மட்டுமல்ல,வைட்டமின்,புரதம்,

மற்றும் polyunsaturated fats நிறைந்த ஆரோக்கியமான உணவு.

மீனில் இருக்கும் சத்துக்கள்:

மீனில் வைட்டமின் A,D,B12,B complex அதிகளவில் இருக்கிறது.

சிறிதளவு வைட்டமின் C & E இருக்கிறது.மேலும் புரதமும்[PROTEIN],polyunsaturated fats ம் இருக்கிறது.

வைட்டமின் A & D எளிதாக செரிமானமாகக் கூடியது.வைட்டமின் A நம் கண்களுக்கு மிகவும் நல்லது.மீனில் உள்ள வைட்டமின் A நம் கண்களை night blindness,colour blindness,xerothalmia போன்ற கண் நோய்களில் இருந்து காக்கிறது.

மீனின் சதையில்[fresh fish]புரதம்[protein]அதிகளவிலும்,மாவுச்சத்து[carbohydrates]குறைவாகவும் இருக்கிறது.மீனில் உள்ள புரதம் ,ஆடு,கோழிமற்றும் முட்டை ஆல்புமினில்[albumin] உள்ள புரதத்தைவிட மேலானதாகக் [superior]கருதப்படுகிறது.

மீனில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் மருத்துவக்குணம் கொண்டது.மீன் எண்ணெய் rickets & tuberclosis நோயாலிகளுக்கு மிகவும் நல்லது.தீக்காயங்கள் மற்றும் புண்களுக்கு மருந்தாகவும் பயன் படுத்தலாம்.மீன் எண்ணெயில் cods,halibut,shark liver oil என்று பல வகையுண்டு.ஆனால் இந்தியாவில் சுறா[shark] மீனிலிருந்து மட்டும் தான் அதிகளவில் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.

மீனோட மகிமைய பாத்தாச்சு!இனிமே மீன உங்க உணவுல அடிக்கடி சேத்துக்குவீங்க்கதானே?

diet-b

Advertisements