மண் கீறி வித்துயிர்க்கும்….

மழை!

முகில் உடைத்து நிலம் நனைக்கும்…

இடி!

மலரிதழ் திறந்து மணம் பரப்பும்…

தென்றல்!

மனம் வருடி மென்னகை விளைக்கும் ….

முத்தம்!

விழி நீர் துடைக்க விரைந்தெழும் …

விரல்!

பசி அறிந்து பரிமாறும்…

பக்குவம்!

துயர் அறிந்து களைய விரையும்…

ஆறுதல்!

முகம் பார்த்து முறுவும் …

ஆதரவு!

வலிக்காமல் நகம் களையும் …

இதம்!

என் இளமை விரும்பும் …

இனிமை!

என் ஞானம் வேண்டும்…

தெளிவு!

தவமிருந்து நான் அடைந்த…

வரம்!

…ஷஹி…

Advertisements