kamal redgiant manmathan ambu


கமலஹாசன் சரண்டர் ஆகிவிட்டார்… ஆமாம் இந்து மதவாதிகள் எழுப்பிய போர்க்குரலுக்கு மதிப்பு கொடுத்து “மன்மதன் அம்பு” படத்திற்காக தான் எழுதிய கருத்துள்ள (??!!) “கண்ணோடு கண்” என்ற பாடலை படத்திலிருந்து நீக்குவதாக அறிவித்திருக்கிறார்…கமலஹாசனிடம் நாம் முன் வைக்கும் கேள்விகள்:

1. என்ன நினைத்து அத்தைகைய ஒரு பாடலை எழுதினீர்கள்? ஏன் அந்த வரிகள் அப்படி கான்டரோவர்ஷியலாய் அமைந்தன? ஆரம்பத்தில் படத்துக்கு தேவை என்றீர்கள்… இப்போது அந்த தேவை எங்கே போனது?

2. கமலஹாசன் என்ற தனிமனிதன் தயாரித்திருந்தால் நீக்கியிருக்க மாட்டேன்.. இது ரெட் ஜயன்ட் பணம் போட்டு தயாரித்தது… அதனால் நீக்கியிருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறீர்களே… நீங்கள் எப்போதிலிருந்து இந்த அளவிற்கு தயாரிப்பாளர்களைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தீர்கள்?… உங்கள் கலைப் பைத்தியத்தால் எத்தனையோ தயாரிப்பாளர்கள் தற்கொலை முயற்சியெல்லாம் செய்தது மறந்து விடவில்லை எங்களுக்கு ( கலைப்புலி தாணு ஆளவந்தானில் பட்ட பாடு போதாதா?) … சாதாரண தயாரிப்பாளர்களிடம் நீங்கள் பேசும் சினிமா தாகம் ஒரு “சக்தி” வாய்ந்த தயாரிப்பாளரிடம் சரணாகதி ஆகிவிட்டதா?

3. கொஞ்ச காலமாகவே உங்கள் பப்ளிசிடி கிம்மிக்குகள் அல்லது ஸ்டண்டுகள் அதிகரித்த வண்ணமே உள்ளன… குறிப்பாக மன்மதன் அம்புவில் நீங்கள் உங்களை விட அதிகம் இது போன்ற பப்ளிசிடிக்களை நம்புகிறீர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.. அதிலும் உங்கள் சமகால நடிகரான ரஜினி எந்திரன் என்ற மெகா ஹிட்டை கொடுத்த பிறகு உங்கள் மேல் உள்ள எதிர்பார்ப்பு இன்னும் கூடுதலாகிவிட்டது. அதனால் இது போல் பாடல் எழுதுவது போல் எழுதி அதை நீக்குவது போல் நீக்கி… நல்ல நடிகர் நீங்கள் கமல்!

4. கொச்சின் ஏர்போர்டில் கேட்கும்போது கூட ” சென்ஸார் இந்தப் பாட்டை க்ளியர் செய்து விட்டது. அதனால் அந்த பாடலை நீக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டு கே.எஸ்.ரவிக்குமாருடனும் உதயநிதியுடனும் ஃப்ளைட் ஏறுகிறீர்கள்… இரண்டு மணி நேரத்தில் பல்டி அடித்து பாடலை நீக்குகிறோம் என்று அறிவிக்கிறீர்கள்… அப்படி அந்த ஃப்ளைட்டில் நடந்தது தான் என்ன ?

5. கமல் – உங்களிடம் நாங்கள் என்னென்னெவோ எதிர்பார்த்தோம்… ஆஸ்கார் வாங்குவீர்கள் என்று உலக நாயகன் பட்டம் தந்தோம்… ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கி விட்டார்.. அதனால் அதை மறப்போம்.. தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு செல்வீர்கள் என்று நம்பினோம்… நீங்களோ கப்பலில் மன்மதன் அம்பு சிடியெடுத்துக் கொண்டு மலேசியா சிங்கப்பூர் என்று சுற்றி விட்டு “பார் உலக அரங்கில் தமிழ் சினிமா” என்று மேஜிக் வேலை காட்டுகிறீகள்… எப்போது இதையெல்லாம் நிறுத்திவிட்டு எங்களுக்கு மீண்டும் ஒரு நாயகனோ இந்தியனோ தரப் போகிறீர்கள்?