உலகையே வியக்கச் செய்த கணித மேதை ராமானுஜம் 1888 டிசம்பர் 22ம் தேதி மிக எளிய குடும்பத்தில் பிறந்து,மிகஏழ்மையான நிலையில் இருந்தார்.எனினும் இவர் சிறு வயதில் யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான உண்மைகளைக் கண்டறிந்தார்.90 ஆண்டுகளுக்கு முன்பே,’பை’ என்ற குறியீட்டுக்கு மதிப்பு கண்டுபிடிக்க பல வழிகளைக் கையாண்டார்.“FELLOW OF TRINITY COLLEGE”என்ற கௌரவத்தைப் பெற்ற முதல் இந்தியர்.

ராமானுஜத்தின் ஆய்வுகளில் “தியரி ஆப் ஈகுவேஷன்ஸ்”,”தியரி ஆப் நம்பர்ஸ்”,”டெபினிட் இன்ட்டக்கிரல்ஸ்”,”தியரி ஆப் பார்ட்டிசன்ஸ் அண்ட் கண்டினியுட்டி” மற்றும் பிராக்சன்ஸ் எனும் நிலைபாடுகள் மிகச்சிறந்தவையாகக் கருதப்படுகிறது.

இன்றும் கணினி பயன்பாட்டில் ராமானுஜத்தின் கணித கண்டுபிடிப்புகளே முக்கிய பங்கு வகிக்கிறது.

உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த கணித மேதை ராமானுஜத்தின் பிறந்த தினமான டிசம்பர் 22 ம் தேதி கணித தினமாக கொண்டாடப்படுகிறது.

தொகுப்பு:diet-b

Advertisements