மன்மதன் அம்பு


மன்மதன் அம்பு கமல் கே.எஸ்.ரவிகுமார்

டைரக்ஷன் : கே.எஸ்.ரவிகுமார்

தயாரிப்பு : ரெட் ஜெயன்ட் மூவிஸ்

கேமரா : மனுஷ் நந்தன்

நடிப்பு : கமல், த்ரிஷா, மாதவன், சங்கீதா, ஊர்வசி, ரமேஷ அர்விந்த்

இசை : தேவி ஸ்ரீ பிரசாத்

திரைக்கதை , வசனம் : கமல்

மன்மதன் அம்பு ………man madan ambu…. அதாவது கமல் “ரிடயர்ட் மில்டரி மேன்”  மாதவன் “தொழிலதிபர் மதனகோபால்…. த்ரிஷா “நடிகை நிஷா என்கிற அம்புஜாக்ஷி” … அதனாலதான் மன்மதன் அம்பு….இப்படி பெயர் விளக்கம் கூறுக ப்குதியில நிறைய மார்க் வாங்குற படம் கதை விளக்கம் கூறுகவில் பாஸ் மார்க் கூட பெற முடியாமல் திணறுகிறது…

கமல் த்ரிஷா மன்மதன் அம்பு

கதை : நிஷா என்ற நடிகையை ( த்ரிஷா ) மணமுடிக்க இருக்கிறார் மதனகோபால் என்ற தொழிலதிபர் ( மாதவன்).. ஆனால் அவரை சந்தேகம் பிடித்து ஆட்ட…அவர்களுக்குள் ஏற்படும் சண்டையில் ஒரு விபத்து நடந்து விடுகிறது… த்ரிஷா கொஞ்ச காலம அவரிடம் இருந்து விலகியிருக்கிறார்.. மூன்றாண்டுகள் கழித்து த்ரிஷா தன் தோழி சங்கீதாவுடன் ஒரு ஹாலிடே க்ரூயிஸ் போகிறார்… சங்கீதா … இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் ஒரு டைவர்சி. த்ரிஷாவின் இந்த ட்ரிப்பை சந்தேகப்படும் மாதவன் ஒரு ப்ரைவேட் டிடக்டிவை வைத்து த்ரிஷாவை பின் தொடர செய்கிறார்.. அவர்தான் கமல். கமல் ஒரு எக்ஸ் ஆர்மி மேஜர்.. விபத்தில் தன் ஃப்ரென்சு மனைவியை பறிகொடுத்தவர்.. அவர் நண்பன் ரமேஷ அரவிந்துக்கு கேன்சர்.. அதர்காக பணம் திரட்ட போராடுகிறார்… கமல் மாதவனிடம் த்ரிஷாவைப் பற்றி நல்ல ரிப்போர்ட் கொடுக்க… நீதான் எதுவுமே கண்டு பிடிக்கலையே என்றூ சொல்லி மாதவன் கொடுப்பதாய் இருந்த பணத்தை கொடுக்க மறுக்க… கமல் வேண்டும் என்றே  “த்ரிஷா ஒரு நபரை ரகசியமாக சந்தித்தார்” என்றெல்லாம் தன்னுடய ஸ்னதிப்புக்களைப் பற்றியே ரிப்போர்ட் செய்து மாதவனிடம் இருந்து பணம் கறக்கிறார்… இடையில் விதி வசத்தால் கமலும் த்ரிஷாவும் நெருங்க … கமலின் மனவி இறந்த விபத்து த்ரிஷாவினால் ஏற்பட்டதுதான் என்று தெரிய வர… மாதவனிடம் ஒரு கடைசி இன்ஸ்டால்மென்டைக் கறந்து விட கமல் எத்தனிக்கும்போது மாதவன் அதே கப்பலுக்கு வருகிறேன் என்று சொல்ல….. சங்கீதா, கமல்…ஒரு குமபலாக இணந்து ஆடும் டிராமாவில் படம் முடிகிறது…

கேமரா : மனுஷ் நந்தனின் கேமரா படத்தின் ஹைலைட்.. பாரீஸ், ரோம், வெனிஸ், சொகுசு க்ரூயிஸ் கப்பல் என்று இவர் கேமரா எங்கு பார்த்தாலும் அழகு….

மன்மதன் அம்பு

இசை : டி.எஸ்.பி… கமல் படம் சான்ஸ் கிடைத்ததில் எஸ்.பி ஆக ப்ரமோஷன் கிடைக்கும் என்று பார்த்தால் கான்ஸ்டபிளாகக் கூட திணறுகிறார்… நீல வானம் பல்லவியின் மெலடியில் மட்டும் நிற்கிறார்… தகிடு தத்தம் பரவாயில்லை… ஹூஸ் த ஹீரோவில் ஆண்ட்ரியாவை பாராட்ட வேண்டும்.. மற்றபடி நத்திங்க் ஸ்பெஷல்!

நடிப்பு :

த்ரிஷா மன்மதன் அம்பு

த்ரிஷா : த்ரிஷா அவர் நடித்த படங்களிலேயே சிறந்த நடிப்பை இந்தப்படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் என்று சொல்லலாம்…VTV யை விட சிறப்பாக நடித்திருக்கிறார்..

மாதவன் : மாதவன் இந்த ரோலை ஏற்க தில் வேண்டும்.. ஃப்ர்ஸ்ட் ஹாஃபில் ஒரு இரக்கமற்ற சந்தேகப் பிராணியாய் வில்லன் கணக்காய் வந்து வெறுப்பேற்றுகிறார்… செகண்ட் ஹாஃபில் அம்மாஞ்சி குடிகாரனாய் மாறி அசத்துகிறார்… சூப்பர் பெர்ஃபாமன்ஸ்.. மன்மதன் அம்பு பாய்ந்ததோ இல்லையோ மாதவன் அம்பு நிச்சயம் ஹிட்!

மாதவன் கமல் மன்மதன் அம்பு

சங்கீதா : சங்கீதா கலக்கிவிட்டார்… வித்தியாசமான டயலாக்குகளை அவர் பன்சுடன் சொல்வது அத்தனை அழகு… அதிலும் அந்த “மேட்ரிமனி ஃபெயில் ஆயிடிச்சி ஆனா அலிமனி சூப்பர்!” ” “அம்மாக்களுக்கு மட்டுமே தெரியும் குழந்தைங்க தூங்குதா இல்லையான்னு”… சூப்பர் சங்கீதா…

கமல் : நடிகர் கமல் பாவம் எழுத்தாளர் கமலிடம் மாட்டிக்கொண்டு திணறுகிறார்… ஒரு பக்கம் ஏதோ இறுகிய முகத்தோடு டிடக்டிவ் வேலை செய்ய வேண்டும்.. மறுபக்கம் … ரமேஷ அரவிந்திற்காக அழ வேண்டும்.. திடீரென்று தகிடு தத்தம் செய்ய வேண்டும்.. அப்புறம் மனைவிக்காக அழ வேண்டும்.. கடைசியில் க்ளைமேக்சில் கும்பலோடு கோயிந்தா போட வேண்டும்.. இடையே த்ரிஷாவோடு சப்டில் ரொமான்ஸ் செய்ய வேண்டும்… ( வயது தெரிய ஆரம்பித்துவிட்டது..  Age catches up with anyone.. even kamalhasan ! ) .. ஆனால் இவ்வளவையும் கமல் என்ற நடிகன் சுலபமாய் தோள் மீது சுமக்கிறார்…

குஞ்சன் : மலையாள இறக்குமதி… காமெடியில் கலக்குகிறார்…! வரவேற்போம்!

மன்மதன் அம்பு

ஹைலைட் : அந்த ஃப்ளேஷ்பேக் பாட்டு நீல வானம்… அதை எடுத்திருக்கும் டெக்னிக் அலாதி.. ரிவர்ஸ் மூமென்ட் ஆனால் வார்த்தை உச்சரிப்பு சரியான லிப் மூமென்ட்.. இந்தியப் படத்திற்கே இது புதுசு !

மன்மதன் அம்புவை பார்க்கப் போகும்போது நிச்சயம் ரசிக்க வேண்டும் என்ற ஆவலோடு  நுழைந்தோம்…..

நடு நடுவே தெரியும் டார்க் ஹ்யூமர் ( dark humor) … இது ஒரு வேளை அப்படிப் பட்ட படமாக இருக்குமோ என்று நினைக்கத் தூண்டியது…  போகப்போக கமல் த்ரிஷா இருவரும் கப்பலுக்குள் நுழைகையில் இது ஒரு ரொமாண்டிக் படமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது… ஆனால் ரமேஷ் அர்விந்தும் ஊர்வசியும் நடு நடுவே வந்து அழுது இது டி.வி சீரியலோ என்று பயம் காட்டுகிறார்கள்… கமல் வேறு நடித்தாக வேண்டுமே என்று தன் பங்கிற்கு அழுகிறார்…. இப்படித் தடுமாறுகிற படம் கடைசி இருபது நிமிடங்களில் கமல் நகைச்சுவை படங்களில் பழக்கப்பட்ட ஆள் மாறாட்டக் காமெடியில் வந்து நிற்கிறது… அதிலும் கிரேசி மோஹன் இல்லாமல் கமல் திணறுகிறார்…   அந்த கான்ட் ரோவர்ஷியல் கண்டனத்திற்குரிய பாட்டு படத்தில் இடம் பெறாததால் கமலுக்கும் த்ரிஷாவிற்கும் உள்ள ஒரு ஒட்டல் தொக்கியே நிற்கிறது! ஆக மொத்தம்..முதல் பாதி. எந்த திசையிலுமே பாயாத அம்பாய் மன்மதன் அம்பு வில்லிலேயே உறைந்து விடுகிறது……இரண்டாவது பாதி திசை தெரியாத அம்பாய் திணறுகிறது…. ஐந்தாவது முறை ஜோடி சேர்ந்திருக்கும் வெற்றிக்கூட்டணியான  கமலிடமும் கே.எஸ்.ரவிக்குமாரிடமும் நிறைய எதிர்பார்த்தோம்… ஏமாந்தோம்…

திசை தெரியாத அம்பு …. குறி தவறிவிட்டது!

சிம்பிள் வெர்டிக்ட் :  ஓடாது மச்சி…! ஃப்ளாப்!

[stextbox id=”warning”]வத்தி வாத்தியாரின் லேட்டஸ்ட் வத்தி : ஏங்க… த்ரிஷாவும் சூர்யாவும் சேர்ந்து  நடிச்சாலே படம் ஊத்தும்ங்கறாங்களே…. ஒரு பாட்டுக்கு சேர்ந்து ஆடுனா கூடவா அந்த சென்டிமென்ட் வர்க் அவுட் ஆகும்?[/stextbox]

[stextbox id=”info”]கமல் ரசிகர்கள் திட்ட வேண்டுமானால் திட்டிக் கொள்ளுங்கள் … லாகின் கூட செய்ய  வேண்டாம்… அப்படியே கமென்ட்ஸ் போடலாம்..[/stextbox]

Advertisements