மன்மதன் அம்பு கமல் த்ரிஷா

கமல் தமிழ் பட உலகின் நிரந்தர புதுமை விரும்பி. ஒவ்வொரு முறையும் தமிழ் திரையுலைகை அடுத்த கட்டம் நோக்கி புது அடி எடுக்க வைப்பதில் கமலின் பங்கு முக்கியமானது… கமல் மன்மதன் அம்பில் பல புதுமைகளை முதன் முறையாக தமிழ்ப்படத்தில் நிகழ்த்தியிருக்கிறார். மன்மதன் அம்பின் விமர்சனம் ஏற்கனவே மூன்றாம் கோணத்தில் வெளியாகிவிட்டது.  மன்மதன் அம்பில் என்னென்ன புதுமைகள் என்பதை இப்போது பார்ப்போம்…

1. முதல் முறையாக தமிழ்ப்படங்களில் ஹீரோயின் ஒருவரைக் காதலித்து பின் தானாகவே வேறொருவரைக் காதலிப்பது வெகு இயல்பாக ( வழக்கமான குரூர வில்லத்தன ஜஸ்டிஃபிகேஷன்கள இல்லாமல்) சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ் ஆடியன்ஸ் இதை ஏற்றுக் கொள்ளும் பக்குவமடைந்து விட்டார்கள் என்று கமல் நம்புவதை இது காட்டுகிறது

manmadhan ambu trisha

2. முதல் முறையாக ஒரு பிரபல ஹீரோயின் ” முன்னூறு பேர் சுத்தியிருக்கிற கேரவன் வேன்லயா செக்ஸ் வச்சுக்குவேன்?” என்று தமிழ் படத்தில் பேசுகிறார். த்ரிஷா பேசும் இந்த வசனம் இதுவரை தமிழ் பட கதாநாயகிகள் பேசக்கூடாத எல்லையை கொஞ்சம் புரட்டிப் போட்டிருக்கிறது…  எந்த முண்ணனி ஹீரோயினும் இதுவரை இப்படி வெளிப்படையாய் “செக்ஸ் வைத்துக் கொள்வது” போன்ற சொல்லோட்டம் கொண்ட டயலாககை சொன்னது இல்லை. காலப்போக்கில் தமிழ் சமுதாயத்தில் ஏற்ப்பட்டிருக்கும் மாற்றங்களையும் பெண்களின் பேச்சுரிமையில் ஏற்ப்பட்டிருக்கும் முன்னேற்றத்தையும் முதன் முறையாக செல்லுலாய்டில் கமல் கொண்டு வந்திருக்கிறார்.

மன்மதன் அம்பு கமல்

3. “சாக்ளேட் பாய்” ஹீரோயிஸம் கேள்விப்படிருக்கிறோம். முதன் முறையாக் தமிழ்ப்பட உலகுக்கு “சாக்ளேட் பாய்” வில்லனிசத்தை கமல் மாதவன் மூலம் அறிமுகப் படுத்தியிருக்கிறார். வெஸ்டர்ன் படங்களில் இந்த சாக்ளேட் பாய் வில்லனிசம் பழக்கப்பட்ட ஒன்று என்றாலும் தமிழ்ப்பட உலகில் அம்மாஞ்சிகள், ஒன்று ஹீரோவாக அல்லது காமெடியங்களாகவே சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். மாதவனுக்கு எப்போதுமே சாக்ளேட் பாய் இமேஜ் உண்டு… அப்படி சாக்ளேட் பாய் மாதவனை வைத்தே இந்த பரிசோதனை செய்திருப்பது மாதவன் துணிச்சல் மட்டுமல்லாது இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் மற்றும் கமலின் தைரியத்தைக் காட்டுகிறது.

manmadhan ambu kamal madhavan trisha

4. “நீல வானம்” பாடல் எடுக்கப்பட்ட விதம் தமிழுக்கு புதுசு. இந்த ரிவர்ஸ் பயன்படுத்தலில் பாலச்சந்தர் வெகு பிரசித்தம். ஆனால் அதை இன்னும் ஒரு படி மேலே கொண்டு போய் ஒரு முழு ஃப்ளேஷ்பேககையுமே இந்தப் பாடலில் ரிவர்ஸ் வ்யூவில் காட்டி கமல் குருவை மிஞ்சிய சிஷ்யன் என்று நிரூபித்திருக்கிறார். அதிலும் விமர்சனத்தில் சொன்னது போல்… அந்த லிப் மூமென்ட் சின்க்ரனைசேசன் ( synchronization)  உண்மையிலேயே புதுசோ புதுசு! ஹேட்ஸ் ஆஃப்!

5. தகிடுதத்தம் பாடலில் பாடல் வரிகளுக்கு ஏற்ப ஃபாரினர்ஸ் ஆடுவது ஒரு புது எடிட்டிங் டெக்னிக்.. வெகு சிரத்தையாக அந்தப் பாடலில் ட்யூனின் டைமிங்கிற்கு ஏற்ப எடிட் செய்திருக்கிறார்கள். ஒரு பர்ஃபெக்ட் ஃப்யூஷன் எஃப்பக்ட் கிடைக்கிறது… இது தமிழுக்கு புதுசு!

6. டார்க் ஹ்யூமர் அல்லது ப்ளாக் காமெடி எனப்படும் மோசமான் சூழ்நிலைகளை வைத்தே காமெடியை மென்மையாக செய்வது கமல் ஏற்கனவே மும்பை எக்ஸ்பிரசில் செய்ததுதான் என்றாலும் இதில் இன்னமும் மெருகேற்றி அதை ஆடியன்ஸ் ரசிக்கும் வகையில் தந்திருக்கிறார். குறிப்பாக மாதவன் பாரில் தோன்றும் காட்சிகளில் தியேட்டரில் கைத்தட்டல் அள்ளுகிறது. தமிழ் ஆடியன்ஸ் இந்த வகையிலும் முதிர்ச்சி அடைந்து விட்டார்கள் என்று கமல் உணர்ந்து இதைப் புகுத்தியதையே இது காட்டுகிறது…

மன்மதன் அம்பு மாதவன் சங்கீதா

7. கமலின் காமம் பற்றிய பாடல் அதற்கு எழுந்த கண்டனம் காரணமாக படத்திலிருந்து நீக்கப்பட்டாலும் அதில் உள்ள வரிகள் ஒரு புதுப் புரட்சி ஃபெமினிசம் உருவாவதை கமல் என்ற கலைஞன் உணர்ந்து எழுதிய வரிகளே அவை… அது கமல் என்ற பாடலாசிரியர் செய்திருக்கும் புதுமை…

8. எந்த தமிழ்ப் படத்திலும் ஆங்கில வார்த்தைகள் இந்த அளவு பயன்படுத்தப்பட்டதில்லை ( மணிரத்னம் படங்கள் உட்பட)… இது தமிழர்களின் ஜனரஞ்சக உலகப் பார்வை இன்னும் நீள்வதை கமல் என்ற வசனகர்த்தா உணர்ந்து எழுதியதாகவே நாம் பார்க்கலாம்.. இதுவும் தமிழுக்கு புதுசுதான்!

புதுமையே ! உன் பெயர் கமலஹாசனோ!

[stextbox id=”info”]மன்மதன் அம்பில் உங்களுக்கு பிடித்தவைகளை / பிடிக்காதவைகளை moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பினால் அதை வாசகர்களூடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவோம்.[/stextbox]

Advertisements