salman khan asin

தமிழின் முண்ணனி ஹீரோயினான அசின் தற்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தமிழில் அவர் நடிக்கும் ஒரே படம் காவலன் தான். பாலிவுட்டில் சல்மான் கானுடம் லண்டன் ட்ரீம்ஸ் என்ற படத்தில் நடித்தார். அப்போதே சல்மான அவருக்கு ஒரு ஃப்ளாட்டை அன்பளிப்பாகக் கொடுத்தார் என்று பரவலாக பேசப்பட்டது. அசின் அமீர்கானுடன் கஜினி என்ற முருகதாஸ் படத்தில் நடித்தார். அதில் அசினுக்கு நல்ல பெயர் கிடைத்தது. பின் இப்போது மீண்டும் சல்மான் கானுடன் ரெடி என்ற படத்தில் நடிக்கிறார். அதனால் மீண்டும் சல்மான் கானுடன் வதந்திகள் ஆரம்பித்தன.

asin salman khan அசின் சல்மான் கான்

குறிப்பாக ஆந்திராவிலும் தமிழகம் மற்றும் கேரளாவின் சில பகுதிகளிலும் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்றே கடந்த சில நாட்களாக ஒரு வதந்தி பரவிக் கோண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம்.. இந்தப் புகைப்படம்தான்..

அசின் சல்மாங்கான் திருமணம் asin salman maariage

இதைப்பற்றி அசினிடம் கேட்ட போது…

“ஆமாம் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டது உண்மைதான்… எனக்கும் சல்மானுக்கும் இது தான் முதல் கல்யாணம்… பஞ்சாபி முறைப்படி… நான் தெலுங்கு, தமிழ் முறைப்படி பல முறை பல படங்களில் தாலி கட்டியிருக்கிறேன்… இப்போது தான் முதல் முறையாக பஞ்சாபி முறைப்படி கல்யாணம் செய்கிறேன்… ரெடி படத்தின் ஸ்டில் தான் இது” என்று சிரித்தபடி கூறினார்…

எப்படி இவ்வளவு பலமாய் இந்த வதந்தி பரவியது என்று தெரியவில்லை.. சமீப காலமாய் அசினுக்கு பாலிவுட்டில் எப்படியாவது ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதே குறிக்கோளாய் இருக்கிறது. அதற்கு சாட்சி அவர் இதுகரை காட்டாத கவர்ச்சி மிகு ஸ்டில்களே… ஆகையால் தான் பாலிவுட்டில் பிரபலமாக அசினே கூட இந்த வதந்தியை பரப்பி விட்டிருக்கலாம்.. ஆக மொத்தம் இது வதந்தி தான் துளியும் உண்மையில்லை..

asin