பனிக்காலம் வந்து விட்டாலே உதடுகல்காய்ந்து,வெடித்துவிடும்.இதற்கு முக்கிய காரணம் தோலில் ஈரப்பதம் இல்லாமை ,உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டே இருப்பது,குளிர் காலங்களில் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது,மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை.

உதடுகளை பாதுகாப்பது எப்படி என்று பார்ப்போம்:

சோற்றுக் கற்றாலை சாரையோ,அல்லது அதிலிருந்து தயாரிக்கப்பட்ட ஜெல்லையோ உதடுகளில் தடவினால் உதடு ஈரப்பதத்துடன் வெடிக்காம்ல் இருக்கும்.

பொதுவாக நாம் குளிர் காலங்களில் தண்ணீர்குடிப்பதில்லை.உடம்பில்

தண்ணீர் சத்து குறைந்தாலும் உதடுகள் வெடிக்கும்.அதனால் குளிர் காலங்களில் தாகம் எடுக்கவில்லையென்றாலும் 8-10 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும்.

ஊட்டச்சத்து பற்றாக்குறையினாலும் உதட்டில் தோல்உரிந்து,வெடித்துப் புண்ணாகும்.அதனால் சத்துள்ள பழங்கள்,காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

புகைபிடிப்பதால் உதட்டில் இயற்கையாக உள்ள எண்ணெய்மற்றும்,ஈரப்பதம் குறைந்து உதட்டில் வெடிப்பு ஏற்படும்.பலவித நோய்களை ஏற்படுத்தும் இப்பழக்கத்தை விட்டு விடலாமே!

பனி நேரத்தில் வெளியில் செல்லும் பொழுது உதட்டில் ஈரப்பதம் நிறைந்த கிரீம்அல்லது வெண்ணெய் தடவிக் கொள்ளலாம்.கடுமையான பனிக்காலங்களில் உதடுகள் வெடித்து புண்ணாவதை தடுக்க வேண்டுமெனில் விடியற்காலை மற்றும் பின்னிரவு நேரங்களில் வெளியில் செல்வதை குறைக்க வேண்டும்.அவசியம் செல்ல நேரிடும் பொழுது ஈரப்பதம் நிறைந்த கிரீமை தடவிக் கொண்டு செல்ல வேண்டும்.

தொகுப்பு:diet-b

படங்கள்:இணையம்.