பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளுக்கு சொந்தக்காலில் நிற்க கற்றுக்கொடுங்கள்.”நான் பட்ட கஷ்டங்களை என் பிள்ளைகள் படக்கூடாது “என்று நினைத்து உங்கள் குழந்தைகளை கெடுத்து விடாதீர்கள்.முதலில் நீங்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை தாய்க்கழுகிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.

கழுகு மிக உயரத்தில் பறக்கக்கூடிய மிக வலுவான பறவை.கழுகுகளின் இப்பறக்கும் சக்தியும்,வலிமையும்,தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல.தாய்க்கழுகின் பயிற்சியினாலேயே இச்சக்தியும்,வலிமையும் கைகூடுகிறது.அப்படி என்ன தான் செய்யுதுன்னு பாப்போமா?

*தாய்க்கழுகு முதலில் கூடுகளில் மெத்தென்று இருக்கும் படுக்கையினைக் கலைத்து,குச்சிகளின் கூர்மையான பகுதிகள் வெளிப்படும்படிச் செய்து குஞ்சுகள் தங்க வசதியற்றப்படிச் செய்கிறது.

*பின் தன் சிறகுகளால் குஞ்சை அடித்து,கொத்தி கூட்டை விட்டுச் செல்ல தூண்டுகிறது.[சரியான ராட்ச்சசியா இருக்கும் போல!].

*அம்மாவோட தொந்தரவ தாங்க முடியாம கூட்டோட விளிம்புல வந்து எட்டிப்பாக்குது.உலகத்தின் பிரம்மாண்டத்தைக் கண்டு பயந்து,தனித்து பயனிக்கத் தைரியமற்றுப் பலகீனமாக நிற்கிறது.அது ஒவ்வொரு குஞ்சும் தன் வாழ்க்கையில் சந்தித்தாக வேண்டிய ஒரு முக்கியமான தவிர்க்க முடியாத கட்டம்.[மனிதனும் தான்].

*கூடு என்பது என்றும் பாதுகாப்பாகத் தங்கிவிடும் இடமல்ல.சுயமாக இயங்குவதே கழுகுக்கு நிரந்தரப் பாதுகாப்பு என்பதைத் தாய் அறியும்.[எல்லோருக்குமே அப்படி தான்!!!!].*அந்தக் குஞ்சு கூட்டின் விளிம்பில் பயந்துக்கொண்டு எட்டிப் பார்க்கும்.அந்த சமையத்தில் குஞ்சின் உணர்வுகளை லட்சியம் செய்யாமல் குஞ்சை கூட்டிலிருந்து வெளியே தள்ளிவிடும்.

*அந்த எதிர்பாராத தருணத்தில் குஞ்சு கஷ்டப்பட்டு பறக்க முயற்சி செய்கிறது.முதல் முறையிலேயே கற்றுவிடும் கலையல்ல அது.குஞ்சு காற்றில் பறக்க முடியாமல் கீழே விழ ஆரம்பிக்கும் நேரத்தில் தாய் வேகமாக வந்து அதை பிடித்துக் கொள்ளும்.[என்ன பாசம் பாருங்க!!!]

*குஞ்சு மீண்டும் தாயின் பிடியில் பத்திரமாக உள்ளதாக எண்ணி நிம்மதியடைகிறது.அந்த நிம்மதி கணநேரம் தான்.தன் குஞ்சை பிடித்துக் கொண்டு வானுயர பறக்கும் தாய் ,குஞ்சை மீண்டும் அந்தரத்தில் விட்டுவிடுகிறது.

*காற்று வெளியில் பறக்கும் கலையை விரைவில் குஞ்சு கற்கிறது.வானை நோக்கிப் பறக்கிறது.தாய்க்கழுகு அதனை முன்னோக்கித் தள்ளாவிட்டால் அந்த சுதந்திரத்தையும்,தைரியத்தையும் அக்குஞ்சு தன் வாழ்நாளில் என்றைக்குமே கண்டிருக்க முடியாது.

*SO FRIENDS!கப்பல் துறைமுகத்தில் இருப்பதுதான் அதற்கு, முழுப் பாதுகாப்பாகத் தெரியலாம்.ஆனால் கப்பலை உருவாக்குவது அதை துறைமுகத்தில் நிறுத்திவைக்க அல்ல.கப்பலின் உபயோகமும் அப்படி நிறுத்தி வைப்பதில்  இல்லை.

கழுகிற்கும்,கப்பலுக்கும் மட்டுமல்ல.மனிதனுக்கும் இது பொருந்தும்.

ஆகவே,நண்பர்களே!!பிள்ளைகளுக்கு வழிகாட்டுங்கள்!வாழ்க்கையை எதிர்கொள்ள கற்றுக் கொடுங்கள்.வழிகாட்டுகிறேன் என்று வழிநெடுகப் போய் அவர்களை பலவீனர்களாக்கி விடாதீர்கள்.ALL THE BEST!!!.

தொகுப்பு:diet-b

Advertisements