நீ தந்து போகும்…
ஒவ்வொரு முத்தமும்
முதல் முத்தமே…
ஒவ்வொரு வகையில்..

ஒரு முத்தமும்..
இன்னொரு முத்தமும்..
ஒரே முத்தம் இல்லையடா..

கூடை கூடையாய்
கோவம் கொண்டு வருவேன் நான்
பதிலுக்கு ஒரே ஒரு முத்தம் கொண்டு வருவாய் நீ..

எத்தகைய..
ஆவேச யுத்ததையும்
உன் அமைதியான முத்தம் வென்று விடுகிறது..

நம் ஊடல் உண்ணவிரதங்களை..
ஒரு முத்தம் கொடுத்து(குடித்து)..
முடித்துக் வைத்திருக்கிறாய்..

நீயில்லாத..
என் வெற்றுத்தனிமைகளை..
எப்பொழுதோ நீ தந்து சென்ற முத்தங்களால்..
நிரப்பிக் கொள்கிறேன்..

உனக்கு பிடித்த
முத்தமும்..
முத்தம் சார்ந்த இடங்களும்..
கவிதைகளாய்…
உன் டைரியில்..

நேரில் முத்தத்திற்கு..
முரண்டு பிடிக்கும்..
என் இதழ்கள்..

வாசித்த பொழுதினில்..
வார்த்தைகளுக்கு..
கொடுத்துப்போகின்றன..
முத்தங்களை..

முத்த மாலையைச் சூடி..
காலக்கண்ணாடியில்..
அழகு பார்க்கிறது..
நம் காதல்..

(கவிதை முத்தங்கள் தொடரும்..)

Advertisements