த்ரிஷா உதடு உண்மையிலேயே தப்பியதா?


trisha த்ரிஷா

சமீபத்தில் கமல் நடித்த மன்மதன் அம்பு படத்தில் த்ரிஷா கமலுடன் நடித்திருந்தார்.. அதை இணையத்தில் விமர்சித்த பலரும் ” இந்தப் படத்தில் கமல் த்ரிஷாவை உதடுகளில் முத்தமிடவில்லை அதனால் த்ரிஷாவின் உதடுகள் தப்பியது!” என்று எழுதுகிறார்கள்.. உண்மையில் த்ரிஷா உதடு தப்பியதா என்ற அறிவு ஜீவி அலசல்தான் இது… ( ரொம்ப முக்கியங்கன்னு நீங்க சொல்றது தெரியுது…ஹி ஹி  ஆனாலும் நாங்கல்லாம் ரூம் போடாமையே யோசிப்போம்ல… )

முதல்ல கமலைப் பற்றி ஏன் அப்படி சொல்கிறார்கள்… கமல் நடித்தால் அந்தப் படத்தில் முத்தக் காட்சி இருக்கும் என்று ஏன் சொல்கிறார்கள்?

trisha த்ரிஷா

ஏனென்றால் தமிழ்ப்பட கதாநாயகர்களில் அதிகமாக முத்தக் காட்சிகளில் நடித்த நடிகர் கமலாய்த்தான் இருப்பார். பல வருடங்கள் முன்னாலேயே “சட்டம்” என்ற படத்தில் ஒரு ஃப்ரென்சு பெண்ணை திரையில் முத்தமிட்டு பரபரப்பு கிளப்பினார். பின்னர் “புன்னகை மன்னனில்” நடிகை ரோகாவுடன் அவர் இணைந்து நடித்த முத்தக்காட்சி பலதரப்பட்ட மக்களாலும் பாராட்டப்பட்டதற்கு காரணம் சிறிதும் விரசமின்றி அதைப் படமாக்கியிருந்த பாலச்சந்தர் தான். பின்னர் கமல் படங்கள் என்றால் அதில் முத்தக் காட்சிகளைப் பார்ப்பது சகஜமானது.

கமல் கௌதமி குருதிப்புனல்

கௌதமி, சுகன்யா போன்ற முன்னணி நடிகைகள் கூட கமலுடன் முத்தக்காட்சியில் நடித்தனர். கமலே இயக்கிய “ஹே ராம்” படத்தில் ராணி முகர்ஜியுடனும் இப்போது பிரபலமான பாடகியாகியிருக்கும் வசுந்தரா தாசுடனும் பத்துக்கும் மேற்ப்பட்ட முத்தக் காட்சிகளிலும்  மற்றும் சில பரபரப்பூட்டும் படுக்கையறை காட்சிகளிலும் நடித்தார். இதனாலேயே கமல் படங்கள் என்றால் அதில் முத்தக் காட்சி இடம்பெறும் என்பது சகஜமாகிவிட்டது…

த்ரிஷா

ஆனால் த்ரிஷா உதடு தப்பியது என்று சொல்வது தவறு… அப்படிச் சொன்னால் த்ரிஷா ஏதோ முத்தக் காட்சிகளிலேயே நடிக்காதது போல ஒரு மாயை நிலவுகிறது… த்ரிஷா சாமி என்ற படத்தில் அவர் திரையுலக ஆரம்ப காலங்களிலேயே விகரமுடன் முத்தக் காட்சியில் நடித்திருக்கிறார்.. சம்திங் சம்திங் படத்தில் ஜெயம் ரவியுடன் முத்தம் கொடுத்து நடித்தார். லேட்டஸ்டாக வந்த விண்ணைத் தாண்டி வருவாயாயில் கூட அவர் முத்தங்கள் வெகு பிரபலம்…

ஆக த்ரிஷா உதடு தப்பியது என்று சொல்வது ஏதோ த்ரிஷா முத்தக் காட்சிகளிலேயே நடிக்காதது போலவும் அவரை கமல் முத்தக் காட்சியில் நடிக்க வைக்க முனைந்தது போலவும் த்ரிஷா தப்பி விட்டதைப் போலவும் எழுதுவது தவறு! ( யப்பா எத எதையெல்லாம் ஆராய்ச்சி பண்ண வேண்டியிருக்கு… இப்பவே கண்ண்க் கட்டுதே!)

trisha kiss த்ரிஷா முத்தம்

Advertisements