vijay nayan விஜய் நயன்

விஜய் : ஹை நயன் எங்க இந்தப் பக்கம்..

நயன் : அப்படியே ஒரு வாக்… நீங்க எங்க இங்க கையில புக்ஸ் வேற…

விஜய் : அது ஒண்ணும் இல்ல… காலேஜ் படிக்க முடியாமயே நடிக்க வந்துட்டேன்… ஆனா நமக்கு இப்ப டாக்டர் பட்டம் எல்லாம் குடுத்துட்டாங்களா அதான் கரஸ்பாண்டன்ஸ்ல படிச்சு எக்சாம் எழுதிட்டு வர்ரேன்…

நயன் : ஐ… ஹௌ ஸ்வீட்… பாசாயிடுவீங்களா?

விஜய் : என் கூட நம்ம இன்னொரு டாக்டரு விஜய்காந்தும் வந்தாரு… அவருதான் என் பக்கத்து சீட்..

நயன் : என்ன எக்சாம் இன்னிக்கு?

விஜய் : இன்னிக்கு லேங்க்வேஜ்… நான் விஜய்காந்துட்ட வந்தோன்ன சொன்னேன்.. நீங்க சீனியர்  தமிழ் தமிழ்னு பேசறீங்க நீங்க எழுதுங்கண்ணா நான் அப்படியே ஃபாலோ பண்ணிக்குறேன் பேப்பர மட்டும் எனக்கு தெரியுற மாதிரி வச்சுக்கங்க ன்னு

விஜய் நயன்  vijay nayan

நயன் : ம்ம்ம் அப்புறம் என்ன ஆச்சு விஜய் ?

விஜய் : அப்புறம்தான் சொல்றாரு அவரு எழுதறது தெலுங்கு பேப்பராம்.. பாரு தமிழெல்லாம் வெளியிலதான் வீட்டுல பேப்பர்ல எல்லாம் தெலுங்குதான்…

நயன் : அச்சச்சோ அப்புறம்

விஜய் : அப்புறம் என்னா… நான் ஒரு வாட்டி முடிவெடுத்துட்டேன்னா எம்பேச்ச நானே கேக்க மாட்டேன்.. காபியடிக்கிறதுன்னு முடிவாய்டிச்சி… பின் வாங்க கூடாது… அதனால் நீங்க தெலுங்குலயே எழுதுங்க நான் ரீமேக் பண்ணிக்குறேன்னு சொல்லிட்டேன்…

நயன் : தட்ஸ் விஜய் !நீங்கதான் ரீமேக் கிங்காச்சே..

விஜய் : ஆனா ஒரு சின்ன ப்ராப்ளம் ஆகிப் போச்சு

vijay nayan  விஜய் நயன் சந்திப்பு

நயன் : என்ன ஆச்சு?

விஜய் : இல்ல கட்டுரை தலைப்பு “நாளை நமதே”

நயன் : வாவ் எம்ஜியார் பட டைட்டில் நீங்கதான் வில்லுலயே எம்.ஜி.ஆர் ஸ்டைல்ல கலக்குனீங்களே… ( எம்.ஜி.ஆர் சமாதி கிட்ட வில்லு ரிலீஸ் அன்னிக்கு நில நடுக்கமே வந்தது இதுனால தான்.. )

விஜய் : இல்ல ” நாளை நமதே” ங்கறதே கேப்டன் தெலுங்குல “ரேப்பு மனதே”ந்னு எழுதுனாரு… நான் அத அப்படியே ரீமேக் பண்றப்ப “கற்பழிக்கும் மனசே”ந்னு எழுதிட்டேன்… சின்ன ப்ராப்ளம் ஆகிப் போச்சி.. சரி அத விடு… எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா… அப்புறம் நீ எப்படி இருக்கே?

நயன் : நல்லா இருக்கேன் விஜய்…சினிமாக்கு கொஞ்சம் ப்ரேக் விடலாம்னு பாக்குறேன்…

விஜய் : நீ சினிமாக்கு பிரேக் விடலாம்னு பாக்குற … எனக்கு பிரேக் குடுத்துடுவாங்க போலிருக்கு… காவலன் ஓடலன்னா ஸ்ட்ரெய்ட்டா விஜய்குமார் டிவி சீரியல்ல அவர் அண்ணன் மகனா ஒரு ரோலிருக்காம் அதில நுழஞ்சிட வேண்டியதுதான்…ஆமாம் நீ ஏன் பிரேக் விடுற?

நயன் : (கொஞ்சம் வெட்கத்தோடு) எல்லாம் அவருக்காகத்தான்… ஆமா நயன் பிரபுதேவா காம்பினேஷன் பத்தி என்ன நினைக்குறீங்க?

விஜய் நயன்  vijay nayan

விஜய் : ஸ்வீட்டாக … அது டெட்லி காம்பினேஷன்… ( எனக்குத்தான தெரியும் எவ்வளவு டெட்லின்னு வில்லுல ரெண்டு பேரும் சேர்ந்து என்ன காலி பண்ணிட்டீங்க)

நயன் : எல்லா இடத்துலயும் இப்பல்லாம் என்ன காதலி நயன் காதலி நயன்னுதான் கூப்பிடுறாங்க விஜய்…

விஜய் : எச்சூஸ்மி.. அதி இன்னாது அது காதலி நயன்

நயன் : அவரு காதலன் இல்லையா அதனால நான் காதலி

விஜய் : அதுல பாரு நயன்.. 1994ல தான் அவர் காதலன்… 2010ல அவர் கள்ளக் காதலன்!

நயன்

நயன்: (கோபமாய் ) என்ன சொல்றீங்க விஜய்

விஜய் : (சச்சின் பட ஸ்டெய்லில்) அப்படின்னு ஊர்ல பேசிக்கறாங்க ஊர்ல….

நயன் : உங்களையும் கமலையும் கூடத்தான் கம்பேர் பண்ணி ஊர்ல பேசிக்கறாங்க…

விஜய் : (ஆர்வமாய்) என்ன பேசிக்கறாங்க?

நயன் : கமல் ஒரே படத்துல பத்து ரோல்ல நடிப்பாராம்.. நீங்க பத்து படத்துல ஒரே ரோல்ல நடிப்பீங்களாம்…

விஜய் : ஓகே ஓகே நாம் ஒருத்தர ஒருத்தர் டேமேஜ் பண்ணக் கூடாது .. ஆல் த பெஸ்ட்.. (மனசுக்குள் ) உனக்கென்னமா நீயும் உன் காதலனும் மானாட மயிலாட வச்சே ஓட்டிடுவீங்க… நமக்குத்தான் டப்பா டேன்ஸ் ஆடிடும்…

null