குழந்தையாய் இருந்த போது,

ஓயாமல் கேட்பேன் கேள்விகள்…

விபரமாய் பதில் வரும் ..அப்பாவிடமிருந்து.

இப்போது அவர் உறங்கும் நேரம் தவிர,

அருகில் செல்வதில்லை நான்!

நச்சரிப்புகளுக்கு ஆளாக நேரமில்லை எனக்கு!

நாளையைப் பற்றிய கவலையும் எனக்கில்லை.

வசதியான முதியோர் இல்லத்தில்…

எனக்கான , முன்பதிவுகள் ..

முடித்துவிட்டேன்!

…ஷஹி…

படம்( golfonline.uk.co)

Advertisements