காலப்பேழையில்..
பொக்கிஷமாய்..
இன்னுமொரு வருடம்…
இறைவன் கொடுத்த வரம்.

ஒவ்வொரு புத்தாண்டிலும்..
நாமேற்கும் உறுதிமொழிகள்..
தற்காலிக சபதங்களாய்..
நாட்காட்டி தாள்களாய்..
கரைந்துவிட.

அடுக்கடுக்காய் சபதங்களுடன்..
அடுத்த புத்தாண்டுக்காய் காத்திருப்போம்.

புத்தாண்டுக்கு மட்டும்…
புன்னகைப்பதாய்..
பூக்களும்..

பண்டிகை நாளில் மட்டும்…
பாடுவதாய்..
பறவைகளும் சபதமெடுப்பதில்லை.

பாடி மகிழவும்..
கூடி குலவவும்..
இன்னொரு ஆண்டு காத்திருக்காமல்…

இலக்கு அடையும் முயற்சிகளை..
இன்றே துவங்குவோம்…
இனிதே துவங்குவோம்…

அகம் கூடி குதுகுலிப்போம்..
ஆனந்தக் கூத்தாடுவோம்..

இந்த நாளும் இனிய நாளே…
எல்லா நாளும் இனிய நாளே…

தங்களுக்கும்..
தங்கள் அன்பானவர்களுக்கும்..

புத்தாண்டு வாழ்த்துக்கள்..
பிரியன்..

Advertisements