shah rukh deepika padukona

ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார்… RA 1 மற்றும் டான் – 2 . இதை அடுத்து ஷாருக் நடிக்கப் போகும் படம் 2 ஸ்டேட்ஸ் ( 2 States) .

shahrukh deepika

ஆமாம், பிரபல இந்திய ஆங்கில எழுத்தாளர் சேதன் பகத் ( Chetan Bhagat ) எழுதிய இந்தக் கதை ஒரு பஞ்சாபி இளைஞன் ஒரு தமிழ்ப்பெண்ணை கல்யாணம் செய்வது பற்றியது. அதற்காக இப்போது ஷாருக்கும் இந்தப் படத்தின் இயக்குநர் விஷால் பரத்வாஜும் கதாநாயகியை தேடி வருகிறார்கள்…

அசின்

தீபிகா படுகோனே பெயர் அடிபட்டலும் கூட கூடுமானவரை ஒரு தமிழ் கதநாயகியையே நடிக்க வைக்கலாம் என்பதுதான் ஷாரூக் எண்ணம்.. அசின் , த்ரிஷா, ஜெனிலியா, ஷ்ரயா   ஆகியோர் இப்போது ஹிந்தியில் நடிப்பதால் அவர்களை கதாநாயகியாக நடிக்க வைத்தால் கூட ஒரு ஃப்ரஷ்னெஸ் கிடைக்காது என்பதால் இதுவரை ஹிந்தியில் நடிக்காத தமிழ்ப்பட கதாநாயகியாக இருந்தால் பெட்டர் என்கிறார்கள்.

shreya  ஷ்ரயா

nayan priyamani bikini

நயன் ஹிந்தியில் நடிக்காத நடிகை தான்… ஆனால் இனி அவர் நடிப்பாரா என்பதே சந்தேகம் தான். இதை அறிந்த ப்ரியாமணி கடும் முயற்சியில் இறங்கியுள்ளார். அவர் ரத்த சரித்திரம், ராவ்ண் போன்ற ஹிந்தி படங்களில் நடித்தாலும் கூட அவர் பாலிவுட்டில் அவ்வளவாக பார்த்திராத முகம்… ஆனால் ஷாரூக் தரப்பிலிருந்து மீரா நந்தனைப் பற்றி விசாரித்ததாகவும் தகவல்கள் வருகின்றன….

மீரா நந்தன்

ஷாருக் 2 ஸ்டேட்ஸில் மணக்கப் போகும் அந்த தமிழ் நடிகை யாராக இருக்கும் என்பது தான் இப்போது பாலிவுட் கோலிவுட் இரண்டிலுமே ஹாட் டாக். (Hot talk …. Hot Dog இல்லை🙂 )