கருந்துயரலைகள் தோற்றும்..

இரவெனும் பேராழி,

பகலொளியெனும்,

மாயத்திரை மறைக்கும் வலியெல்லாம்,

வலித்துச் சேர்க்கும் வெளியெங்கும்!

திண்மைப் படகுகள்..

கதிரொளியில் மட்டுமே பயணிக்கும்!

ராவெனும் பேரலை

அமிழ்த்திடும் திடமெல்லாம் ஆழ!

துயரின் தொலைவுக்கு,

நீளும் இரவின் தூரம்.

மார்பின் கனமெல்லாம்..

பெருமூச்செறிவுகளில் தெரிக்க,

புலரும் பிரிதொரு பொழுது,

எறிந்ததெல்லாம்,

மீண்டும் ஒளிக்க!

..ஷஹி..

Advertisements