ரோஷ்னியின் தீப்பொறி

ரோஷ்ணியின் கிடுக்கிப் பிடியில் மாட்டிக்கொண்டு முழி பிதுங்கிய காட்டேரியான் “இனி உங்களுக்கு கேடு எதுவும் செய்யமாட்டேன். உங்களுக்கு ஊழியம் செய்வதுதான் இனி என் தலையாய பணி.” என்றெல்லாம் பேசி உயிர் தப்பினால் போதும் என்று சரணாகதி அடைந்தான். ரோஷ்ணிக்கு முருகக் கடவுள் கேட்டதும் ,கேட்ட வரத்தை அருள த் தயாராக இருந்த போதும், ரோஷ்ணி தன்னுடைய இயற்கையான கருணையுடன் காட்டேரியானை மன்னிக்கவே தயாராக இருந்தாள். ரோஷ்ணி என்னும் அந்த சினனஞ்சிறு பெண் பார்க்கத்தான் சிறுமி. அவளுடைய பலம் என்பது முற்பிறவியின் தவ வலிமையால் வந்தது. குழந்தையாகக் காட்சியளிக்கும் அவளைப் பார்ப்பவர் யாருக்கும் அவளுடைய சக்தி புரியாது. ரோஷ்ணியும் தன்னுடைய சக்தியைப் பெரிதாக எடுத்துக் கொண்டு யாரையும் துன்புறுத்துவதில்லை. கஷ்டப்படுகிறவர்கள்மீது இரக்கம் காட்டும் தேவதையாகவே விளங்கினாள். எனவே காட்டேரியான் உயிர் தப்பினான்.
இப்படியான ஒரு நிலமையில்தான் வீட்டுக் கூரையின் தென்புற மூலையில்,” கீச் கீச் “சென்ற ஒரு சிரிப்பு கேட்டது. அதை சிரிப்பு என்று சொல்வதைவிட இளிப்பு என்றே சொல்லலாம். கோபம் கொண்ட ஜில்லாக் குள்ளன், “யாரங்கே?” என்று அதட்டிக் கேட்டான்.கேட்டதுதான் தாமதம்! “டம டம டமார்….! “என்ற ஒரு பெரிய இடிச்சத்ததுடன் கண்கள் கூசுமளவுக்கு ஒரு மின்னலும் மின்னியது.மழையுமில்லை; புயலுமில்லை; என்ற நிலமையில், இப்படியொரு இடியையும் ,மின்னலையும் கண்ட அனைவரும் பயந்து அப்படியே கீழே விழுந்து ஒடுங்கிப் போயினர்.வர்ஷ்ணி அழக்கூட பயந்து ரோஷ்ணீயின் மீது ஒட்டிக் கொண்டாள்.லைலாக்காவும், பல்கியும் நடுங்கிப் போய் கப்சிப் பென்று ரோஷ்ணியிடம் தஞ்சமடைந்தனர்.ரோஷ்ணி மட்டும் தைர்யத்தைத் திரட்டிக் கொண்டு வருகிற ஆபத்தைச் சந்திக்கத் தயாரானாள். ஜில்லாக் குள்ளனும் எந்த ஆபத்திலும் ரோஷ்ணிக்குத் துணை நிற்கத் தயாராக இருந்தான். அந்தத் தருணத்தில் ,யாரும் எதிர்பாராவண்ணம் ஒரு நிகழ்ச்சி நடந்தது.மலை ஒன்று நிலத்தில் எழும்பியது போல உடம்பெல்லாம் ட்யூப் லைட் போட்டதுபோல மின்னிக் கொண்டு, ஒரு உருவம் எழும்பி நின்றது. அது அஙகுமிங்கும் ஓடி கையால் மரங்களைப் பிடுங்கிச் சாய்த்தது .வீட்டுக் கூரையைப் பிடித்து இழுத்துக் கீழே தூக்கி எறிந்தது. அனைவரும் நடுங்கிப் போயினர். “ஏய், யார் நீ? என்ன வேண்டும், உனக்கு?” என்று கேட்ட ரோஷ்ணியை அலட்சியமாக ஏறிட்டுப் பார்த்த அந்த உருவம் “உங்கள் அனைவரையும் தின்னாமல் போக மாட்டேன் நான்,என் தலைவன் அனுப்பிய காட்டேரியானை ஒன்னுமில்லாமல் செஞ்சேல்ல? உன்னை ஒரு வழி பண்றேம்பாரு!” என்று அங்குமிங்கும் குதித்தான். மலை ஒன்று நகர்ந்து நகர்ந்து, எழும்பி எழும்பிக் குதிப்பதுபோல இருந்ததனால் எல்லோரும் பயந்து கத்தினர்.கொஞ்சமும் தாமதிக்காத ரோஷ்ணி அவன் ஒரு சுவர் அருகே சென்றதும் அவன் அந்தண்டை இந்தண்டை நகர முடியாமல் அவன் எதிரே போய் நின்று கொண்டாள்.தன் சக்தி அனைத்தையும் திரட்டி கண்களிலிருந்து தீப்பொறி தெறிப்பது போல அவனுடைய கண்களை உற்று நோக்கினாள்……

Advertisements