2011–புத்தாண்டு எப்படி?

மேஷ ராசி

மேஷ ராசி

கிரக சூழ்னிலைகள்இந்த ஆண்டு நமக்கு நன்மை பயக்குமாஎன்பது எல்லோருக்கும் உள்ள இயற்கையான ஆவல். எப்படிப்பட்ட நிலைமையும் இறைவன் அருள் ஒன்றினால் சரியாகிவிடும் என்பதனை உணர்ந்து அனுதினமும் இறை வழிபாடு செய்தால் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை என்று கூறி, ஒவ்வொரு ராசிக்கும் உள்ள பலாபலனை இங்கே கொடுத்துள்ளேன்.

மேஷம்
————

அவ்வப்பொது சில விரயச்செலவுகள் வரும்.மருத்துவ செலவுகளை மேற்கொள்ள வேண்டிவரும்.சுபகாரியங்களூக்காக கடன்பட வேண்டிவரும். மறைமுக எதிரிகளால் தொல்லைகள் ஏற்படக்கூடும். பற்கள் சம்பந்தமான வியாதிகள் ஏற்படும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிர்பாராத தனலாபமும் சிலருக்குக் கிடைக்கலாம். மே மாதம் 16ம் தேதிக்கு மேல் மனதில் தொல்லைகளூம் டென்ஷனும் அதிகமாகும். நண்பர்களும் உறவினர்களும் உங்களைவிட்டு விலகிப் போவார்கள். சிலருக்கு கௌரவக்குறைவும் அவமானங்களு ஏற்படக்கூடும்.சொல்வாக்க்ம் செல்வாக்கும் குறையும். யாரையும் எளிதில் நம்பக்கூடாது. பயணங்களின்போது சிறுசிரு விபத்துக்கள் ஏற்படலாம்; எச்சரிக்கை அவசியம். ராகு கேதுக்களின் சஞ்சாரத்தால், மேற்கண்ட தொல்லைகள் ஏற்பட்டாலும் சனி பகவானின் சாதகமானமான நிலை பெரும்பாலான தீய பலன்களைக் குறைத்துவிடும். தெய்வ வழிபாடும் கைகொடுக்கும். பிப்ரவரி மாததில் ஒரு நல்ல சேதி வந்து சேரும். பொதுவாக தன்னுடைய உடல் நலத்திலும் தன் வாழ்க்கைத்துணையின் உடல் நலத்திலும் கவனம் தேவை . கவனம் தவறினால் பிரச்சினை ஏற்படக்கூடும்.

சிலருக்கு அரசு ஊழியர்களால் தொல்லை ஏற்படும். பெற்றோர் வழி உறவினர்களால் சிலருக்கு நன்மைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.


பரிகாரம்
********

துர்கைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலையில் ராகு காலத்தில் எலுமிச்சைப் பழ விளக்குப் போட்டால்,மன நிம்மதியுடன் இருக்கலாம்.

Advertisements