ரிஷபம்
——–

ரிஷபம்

ரிஷபம்

கிரக சூழ்நிலைகள் இந்த ஆண்டு நமக்கு நன்மை பயக்குமா என்பது எல்லோருக்கும் உள்ள இயற்கையான ஆவல். எப்படிப்பட்ட நிலைமையும் இறைவன் அருள் ஒன்றினால் சரியாகிவிடும் என்பதனை உணர்ந்து அனுதினமும் இறை வழிபாடு செய்தால் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை என்று கூறி, ஒவ்வொரு ராசிக்கும் உள்ள பலாபலனை இங்கே கொடுத்துள்ளோம்.

ரிஷப ராசி

————-

இந்த ஆண்டு முதல் 5 மாதங்கள் உங்களுக்கு நல்ல பலன்களே நடைபெறும்.திருமணங்கள் நடைபெறும். வேலைவாய்ப்பு கிடைக்கும். புத்திர பாக்கியம் கிடைக்கும். சொந்த ஊருக்கு மாற்றல் கிடைக்கும். வாழ்க்கைத்துணையை வாட்டிவந்த பிணி நீங்கும்.கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். மே மாதத்துக்குப்பின் செலவினங்கள் அதிகமாகும். சுபச்செலவுகள் ஏற்பட்டாலும்கூட அது உங்களுக்கு மிகவும் தொல்லையாக இருக்கும்.

ஜூன் மாதம் கொஞ்சம் சோதனையான மாதம்.

மாத பிற்பகுதியான ஜுன் முதல் டிஸம்பர் வரை, விரயச்செலவுகள், அலைச்சல், மனதில் அச்சம் , எதிரிகளால் தொல்லைகள் ,குடும்பத்தில் வாக்குவாதங்கள் இவை ஏற்பட வாய்ப்புண்டு.

பரிகாரம்
———–

வியழக்கிழமைதோறும் தட்சிணாமூர்திக்கு பொன்னரளிப் பூவால் மாலை போட்டு பூஜிக்கவும்.

Advertisements