ஒட்ஸ்:கரையக் கூடிய நார்ச்சத்து நிறைந்த தானியம்[SOLUBLE FIBER].கொலஸ்டீராலை குறைக்கக் கூடிய சாப்போனின்ஸ் என்ற பைட்டோகெமிக்கல்[phytochemical saponins] நிறைந்தது.ஒட்ஸை தொடர்ந்து சாப்பிடுவதால் இதய நோய் மற்றும் புற்றுநோயால் ஏற்படும் ஆபத்து குறைகிறது.

தக்காளி: தக்காளியில் vit-c ம் ,லைக்கோபீன் என்ற antioxidantம் அதிகளவில் இருக்கிறது.லைக்கோபீன்[lycopene] நிறைந்த உணவை தொடர்ந்து உண்ணு பொழுது இதய நோய் ஆபத்திலிருந்தும்,மார்பக மற்றும் புராஸ்ட்ரேட் புற்று நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

வெண்ணெய் பழம்:[AVACADOS]:பொட்டாஷியம் மற்றும் பீட்டா கரோட்டீன் நிறைந்த பழம்.நல்ல கொழுப்பு [HDL]நிறைந்த பழம்.இப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் கொலஸ்டீரால்[TOTAL CHOLESTEROL] குறைகிறது என்றும் கெட்ட கொழுப்பு[LDL] மற்றும் tri glycerides ம் கணிசமாகக் குறைகிறது என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

தொகுப்பு:diet-b

படங்கள்:இணையம்.

Advertisements