நெடுநாட்களாக சந்திக்காமல் பேசிக்கொள்ளாமல் இருந்த அஜித்தும் விஜயும் சந்தித்துக் கொண்டார்கள்… இவர்களின் இந்த திடீர் சந்திப்பு கோலிவுட்டை அதிரவைத்துள்ளது

விஜய் அஜித் vijay ajith meeting

இந்த சந்திப்பின் பின்னணி என்ன?

* விஜயும் அஜித்தும் ரஜினி கமலை அடுத்து தமிழ் சினிமாவில் பேசப்பட்ட முன்னணி கதாநாயகர்கள்.. கொஞ்ச்ச நாட்களாக அந்த நிலை இல்லை.. இப்போது எல்லாரும் சூர்யா விஜய் என்கிறார்கள்…

*அதிலும் சமீபத்தில் நடிகர் சங்கம் நடத்திய விழாவில் வரிசையாக நடிகர்களை அழைக்கையில் திரும்பத் திரும்ப சூர்யா, விஜய் , அஜித் என்றே அழைத்தார்கள்.. இது தான் இன்றைய கோலிவுட் ரேங்கிங்

* சூர்யா கோடம்பாக்கத்தில் அதிரடியாக முன்னேறியது மட்டுமல்லாமல் அவர் தம்பி கார்த்தியும் அதிரடியாக முன்னேறுகிறார்.. அதாவது க்ரூப் ப்ராண்ட் வேல்யூ பில்டப்… இது கோலிவுட்டுக்கு புதுசு அதாவது சூர்யா படத்துக்கு கார்த்தி ஸ்டேட்மென்ட் கொடுப்பார்.. இப்போது கூட “சிறுத்தை” படத்தின் பி.ஆர்.ஓ நான் என்று ஓபனாகவே சூர்யா ஸ்டேட்மென்ட் விடுக்கிறார்.. ஆக சகோதரர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தூக்கி விட்டுக் கொள்கிறார்கள்.. சிறுத்தை ஸ்கிரிப்ட் சொன்னது சூர்யாவிற்காக.. ஆனால் சூர்யா கார்த்தியை நோக்கி கை காட்ட இப்போது கார்த்தி நடிக்கிறார்.. அதோடு நல்ல ப்ளானிங் வேறு.. இருவர் படங்களும் ஒரே நேரம் தியேட்டரில் வராது பார்த்துக் கொள்கிறார்கள் அண்ணன் தம்பிகள்.. இது எல்லாமே கோலிவுட்டுக்கு புதுசு.. ஆனால் பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் இது சகஜம் தான்.. சன்னி டியோல் பாபி டியோல்.. சிரஞ்சீவி பவன் கல்யாண் என குரூப் ப்ரமோஷன் மூலம் ஒரே குடும்ப டாமினேஷன் அதிகம்.. ஆனால் தமிழில் முதல் முறையாக சூர்யா கார்த்தி அதை செய்கிறார்கள்.

* இதை தலயும் தளபதியும் கவனிக்கத் தவறவில்லை

* சில அரசியல் காரணங்களும் தலைக்கும் தளபதிக்கும் எதிராகவே இருந்திருக்கின்றன.. கலைஞர் பாராட்டு விழாவில் அஜித் ஓபன் ஸ்டேட்மென்ட் விடுத்து நடிகர்கள் விழாக்களுக்கு வரவழைக்க கட்டாயப் படுத்தப் படுகிறார்கள் என்றார்.. அதில் ஆளும் கட்சிக்கு அதிருப்தி.. ரஜினி தலையிட்டு சமரசம் செய்தார்.

விஜய் அஜித்  vijay ajith

* அதே போல் , விஜய்க்கும் ஆளும் கட்சிக்கும் இப்போது ஏழாம் பொருத்தம்.

* அதனால் சன் , உதயநிதி என இப்போது திரையலக ஜாம்பவான்கள் எல்லாரும் தலயும் தளபதியும் தோற்க வேண்டும் என்றே எண்ணுகிறார்கள்.

*இந்தப் பின்னணியில்தான் அஜித்தும் விஜயும் சந்தித்துக் கொண்டார்கள். இது நடந்தது அஜித் நடிக்கும் மங்காத்தா ஷூட்டிங்கில்

* ஒரு காலத்தில் கமல் ரஜினி இருவரும் சேர்ந்து அழகாக முடிவெடுத்து ஒற்றுமையாக இருவருமே தத்தம் திசைகளில் முன்னேறினார்கள்

* அஜித்தும்  விஜயும் இந்தசசந்திப்பில் பேசியதும் அதுதான்.

* இனி தல படம் வரும் நேரம் தளபதி படம் வராது. ஒரு தியேட்டர் அன்டர்ஸ்டேண்டிங்குக்கு வர இரு நடிகர்களும் முடிவெடுத்திருக்கிறார்கள்.

* அதே மாதிரி எப்படி சூர்யா கார்த்தி க்ரூப் ப்ரமோஷனில் ஈடுபடுகிறார்களோ அதே மாதிரி அஜித்தும் விஜயும் ஈடுபடுவார்கள்.. தல படத்தை புகழ்ந்து தளபதி பேசுவார். தளபதி படத்தை தல புகழ்வார்…

* பார்க்கலாம்.. இந்தக் காம்பினேஷன் என்ன செய்கிறதென்று!

Advertisements