kaavalan

விஜய் கதாநாயகனாக அசினுடன் இணைந்து நடிக்கும் காவலனுக்கு மீண்டும் ஒரு பிரச்சினை முளைத்துள்ளது. ஏற்கனவே டிசம்பரில் ரிலீசாக வேண்டிய காவலன் பொங்கல் வரை தள்ளிப் போனதற்கு காரணமே கோர்ட் காவலன் ரிலீஸை எதிர்த்து பிறப்பித்த தடைதான் . ஒரு வழியாய் அந்த வழக்கைத் தாண்டி காவலன் பொங்கல் ரிலீஸ் என்று அறிவித்தார்கள். சென்ஸார் போர்டும் காவலனுக்கு யு சர்டிஃபிகேட் கொடுத்தது. ஆனால் இப்போது காவலனுக்கு மீண்டும் பிரச்சினை ஆரமபமாகியுள்ளது. இந்தமமுறை பிரச்சினை கொடுப்பவர்கள் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம். நேற்று திருச்சியில் நடைபெற்ற தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டத்தில் காவலன் ரிலீசுக்கு எந்த வித ஒத்துழைப்பையும் தர மாட்டோம் என்று தீர்மானம் போட்டிருக்கிறார்கள். இது விநியோகஸ்தர்கள் வழக்கமாய் போடும் ரெட் கார்டுக்கு இணையாகுமா என்று தெரியவில்லை.

காவலன் விஜய் kavalan vijay

இதற்கு காரணமாக இந்த சங்கத்தின் துணைத்தலைவர் நாராயணசாமி நாயுடு ” சுறா படத்தில் எங்களுக்கு எக்கச்சக்க நஷ்டமானது.. அதை ஈடுகட்ட நாங்கள் விஜயிடம் முறையிட்டோம். ஆனால் அவர் அதற்கு எதையுமே செய்யவில்லை. ரஜினி பாபா படத்தில் ஏற்ப்பட்ட நஷடத்தை ஈடுகட்டினார். ஆனால் விஜய் தொடர்ந்து பல படங்கள் நஷ்டம் கொடுத்தும் கூட எதுவுமே செய்யவில்லை. ஆகையால் விஜய் படத்திற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எந்தவித ஒத்துழைப்பும் தர மாட்டோம் என தீர்மானம் போட்டிருக்கிறோம்!” என்றார். எந்தவித ஒத்துழைப்பும் என்றால் என்ன அர்த்தம்? ரிலீசுக்கு தியேட்டர்கள் தர மாட்டார்களா? காவலனுக்கு அடுத்த சிக்கல் வந்திருக்கிறது…..பொங்கலுக்கு காவலன் வருமா?