சிம்மம்
*******

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்கள் அஞ்சா நெஞ்சம் கொண்டவர்கள்.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ராசி இது. மற்ற ராசிக்காரர்களைப் போலவே இந்த ராசிக்காரர்களுக்கும் மே மாதத்துக்கு முன்னும் , பின்னும் என்று பிரித்துச் சொல்ல வேண்டும். மே மாதம் வரை நற்பலன் கள் ஏற்பதுடுவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு ஏனென்றால் குரு அஷ்டமத்திலும் ராகு ஐந்தாம் இடத்தில் இருப்பதால். ஜூன் மாதத்துக்குப் பிறகும்கூட ராகு, கேது முதலிய கிரகங்கள் 4 மற்றும் 10ம் இடத்துக்கு வருவதில் நன்மை எதுவும் கிடையாது. இருப்பினும் மே 8ம் தேதிக்குப் பிறகு , 9ம் இடத்திற்கு வரும் குரு நல்ல பலன்களைக் கொடுப்பார். ஆண்டு முழுவதும், சனி பகவான் 2ம் இடத்தில் சஞ்சரிப்பதும் நல்லதல்ல. எனவே எல்லா விஷயங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்து ஆண்டு பலன்களைச் சொல்லப் போகிறேன். மே16 வரை கேதுவின் சஞ்சாரம் சுபச்செலவுகள் , நிலம் வாங்கும் யோகம் இவற்றை ஏற்படுத்தும். பணப் புழக்கம் இருக்கும் அதே சமயம் செலவுகளும் ஏற்படும். எனவே சிக்கனமாக இருப்பது நல்லது. எடுத்த காரியங்களிலும் செய்யும் முயற்சிகளிலும் வெற்றியைக் காணலாம். அதே நேரத்தில் 5ம் இடத்தில் பயணம் செய்யும் ராகுவால், ஆரோக்கியம் கெடும். மருத்துவச் செலவுகள் ஏற்படும். மனதில் எப்போதும் ஒருவித கவலையும் பயமும் இருந்து கொண்டிருக்கும். புத்திரர்களால் மனக்கவலை ஏற்படும். எதிரிகளின் சதி எப்போதும் வாட்டிக் கொண்டே இருக்கும். வாகனத்தால் விரயச் செலவுகள் ஏற்படுவதோடல்லாமல் வாகனங்களை விற்கவும் நேரும்.வாகனங்களை மட்டுமல்லாது, வீடு மனை இவற்றைக் கூட விற்க வேண்டி வரும். சொந்தங்கள் விலகிப் போகும். மனதில் எப்போதும் ஒருவித பயம் இருந்துகொண்டே இருக்கும். தொழில் பாதிப்பு, அரசு வேலையில், வேலைப் பளு முதலியவை தவிர்க்க முடியாதது. உங்களுக்கு வந்து சேரவேண்டிய பணம் கூட வராமல் போகுமே; என்ன செய்ய முடியும்? நாணயம் இல்லாதவர் என்ற ஏச்சுக்கு நீங்கள் ஆளாவீர்கள். பிறரிடமிருந்து அவ்வப்போது உதவிகள் கிடைத்தாலும்கூட உங்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது. குடும்பத்தில் சண்டை சச்சரவு ஏற்படும் . உடல் நலம் பாதிக்கப்படும். கோர்ட், கேஸ் நிலுவையில் இருப்பவர்கள் வம்பு ,வழக்கு என்று அலைய வேண்டியிருக்கும். தீர்ப்பும் சாதகமாக இருக்காது. மே மாததுக்குப் பிறகு, மேஷத்துக்கு வரும் குருவால் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம். குருவின் சஞ்சாரத்தினால் நற்பலன்கள் ஏற்படும். சனி ,ராகு ,கேது இவர்களின் தீய பலன்களைக் குறைப்பார். கணவன் ,மனைவி உறவு கொஞ்சம் மேலோங்கும். பொருளாதாரச் சிரமங்களுக்கு இடையே கூட குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். மன மகிழ்ச்சி வரும். சோர்வு நீங்கி ,தேஜஸ் கூடும். குடும்பத்தில் சுப காரியங்களுக்கான வாய்ப்புகள் கூடிவரும். முன்பு ,மங்கிப் போயிருந்த உங்கள் புகழ் இப்போது கூடும்.இனி மாதவாரியான பலன்களைப் பார்த்தோமானால், மார்ச், ஏப்ரல்,அக்டோபர் மாதங்களில் கொ ஞ்சம் சோதனைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும்.எனவே நல்லதும் கெட்டதும் கலந்து வரும் இந்த மாதத்தில் இறைவனருளின் துணையோடும் சாமர்த்தியத்தோடும் , தெம்போடு நடை போடுங்கள்.

பரிகாரம்
*******

சனிக்கிழமை சனி பகவானை எள் தீபமிட்டு வணங்கவும். ஞாயிற்றுக்கிழமைகளில் வினாயகருக்கு அபஷேகமும், துர்கைக்கு எலுமிச்சைப் பழ விளக்கும் போடவும். தட்சிணாமூர்த்திக்கு பொன்னரளிப்பூ மாலை போட்டு, கொண்டக்கடலை நைவேத்யம் செய்யவும். எதையும் சமாளிக்கும் சக்தியாக அந்த ஆண்டவனே முன்னின்று நடத்துவார். வாழ்க!; வாழ்க!.

Advertisements