துலாம்…2011..எப்படி?
*******************

ுலா ராசி – மூன்றாம் கோணம்

உங்கள் ராசிக்கு மே 7ம் தேதிவரை குரு பகவான் 6ம் இடத்திலும், அதன்பிறகு, ஆண்டின் இறுதிவரை ,7ம் இடத்திலும் சஞ்சரிக்கிரார். மே மாதம்வரை கொஞ்சம் மந்தமாக இருந்த நிலை மே மாதத்துக்குப் பிறகு, பலம் பெறும். இதே கால கட்டத்தில் ராகுவின் சஞ்சாரம் பாதகமாகவும் கேதுவின் சஞ்சாரம் சாதகமாகவும் இருக்கும். வருகிற ஜூன்9க்குப் பின் இந்த இரு கிரகங்களாலும் தொல்லைதான் . மேலும் இப்போது உங்களுக்கு விரயச்சனி நடந்து கொண்டிருக்கிறது. இது பல தொல்லைகளையும் தடைகளையும் ஏற்படுத்தும். தேவைக்கேற்ற பணம் வருவதற்கு முன்பே செலவு வந்து முன்னால் நிற்கும். சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். புத்திரர்களின் சுப காரியங்களில் தடைகளும் காலதாமதமும் ஏற்படும். புத்திரகள் காதல் திருமணம் செய்துகொண்டு உங்களை விட்டுப் பிரிந்து செல்ல நேரலாம். சிலருக்கு புத்திரர்களுடன் மன வேறுபாடு ஏற்படும் . புத்திரர்கள் உங்களை விட்டுப்பி ரிந்து செல்லும் நிலையும் ஏற்படும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு தவிர்க்க முடியாதது,. கல்வியில் ஈடுபாடு ஏற்படாமல் தடை உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்களும் தடைப்படும். வெளி நாட்டு வேலை வாய்ப்புகள் வந்தாலும் , அவை வெளி நாட்டுக்குச்சென்றபின் சிரமங்களையே ஏற்படுத்தும். பண விஷயம் திருப்தியாக இருக்காது.

பண விஷயத்தில் தொல்லைகள் தவிர்க்க முடியாது. நீங்கள் கடன் கொடுத்தவர்கள் உங்களிடமிருந்து ஓடி ஒளிவார்கள்.ஆனால் உங்களுக்குக் கடன் கொடுத்தவர்கள் உங்களைத் துரத்திப் பிடிப்பார்கள்.

தாயாரின் உடல் நலம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாது, தாயாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிய நேரிடும். வீடு, மனை இவை சம்பந்தப்ப்ட்ட விரயம் ஏற்படும். நீண்ட காலம் கவனிக்காமல் விடப்பட்ட மனையைப் பிறர் ஆக்கிரமித்துக்கொள்ளும் ஆபத்து நேரும். ஆனால், 7ம் இடத்துக்கு வரும் குருவினால் ஒருசில நன்மைகளும் ஏற்பட வழியுண்டு. எதிரிகள் உங்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளே சில சமயம் உங்களுக்கு சாதகமாக அமையும். குருவின் சஞ்சாரத்தால், , சுப காரியங்க்கள் நடக்கவும் வழி ஏற்படும். கடுமையான உழைப்பின் மூலம் சில வெற்றிகளும் கிடைக்கும். பொது வாழ்க்கையில் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக்கொள்வது நல்லது. உங்க்களுடைய தசாபுத்திப் பலன்கள் யோகமாக இருக்குமானால் கெடுபலன்கள் வெகுவாகக் குறையும். மார்ச், மே, ஜுன்,அக்டோபர் முதலிய மாதங்களில்அதிகப்படியான கவனம் தேவை. சோதனைகள் மிகுந்த இந்த ஆண்டை, கீழ்க்கண்ட பரிகாரங்களைச் செய்து இறைவனின் நல்லருளைப் பெற முயற்சி செய்யுங்கள்.


பரிகாரம்
********

ஞயிறு ராகு காலத்தில் துர்கைக்கு எலுமிச்சம்பழ விளக்கும், சனிக்கிழமை சனி பகவானுக்கு எள்தீபமும், தட்சிணாமுர்த்திக்கு பொன்னரள்ப்பூவால் மாலை போட்டு கொண்டக்கடலை நைவேத்தியமும் செய்தால், துன்பங்கள் விலகும். வாழ்க!

Advertisements