விருசிகம்
————


மிகவும் தைர்யசாலியான விருச்சிக ராசிக்காரர்களே! இந்த ஆண்டு மே மாதம் 7ம் தேதிவரை உங்கள் ராசிக்கு 5ம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிப்பது சாதகமான நிலை. அதன் பிறகு, குரு 6ம் இடத்துக்கு மாறுவது நல்லதல்ல. இந்த ஆண்டு முழுவதுமே ராகு கேதுக்களின் சஞ்சாரம் சரியில்லை. சனி பகவான் மட்டும் இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்குச் சாதகமான 11ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். சனி பகவான் சாதகமான நிலையில் சஞ்சரிப்பதால், ராகு , கேதுக்களின்கெடு பலன்களைப் ப்ற்றிக் கவலை கொள்ள வேண்டியதில்லை 6ம் இடத்துக்குப் போகும் குருவும் கூட 5 மாதங்களில் வக்கிரமாகிவிடுவதால், நல்ல பலன்களையே கொடுப்பார். எனவே புத்தி சாதுர்யத்துடன் செயல்பட்டால் இந்த ஆண்டை நீங்கள் வெற்றியுடன எதிர்கொள்ளலாம். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் சிறப்பான சூழ் நிலையும் பங்கு வர்த்தகத்தில் நல்ல லாபமும் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் யோகமும் , வெளி நாட்டு வேலை வாய்ப்பும் கிடைக்கும். அலுவலகத்தில் பணி புரிபவர்களுக்கு வேலைப்பளு குறையும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக இருப்பார்கள். கீழே வேலை செய்பவர்கள் சிறப்பாகப் பணியாற்றி உங்களுககு நற்பெயரைத் தேடிக் கொடுப்பார்கள். புத்திரப் பேறு கிடைக்கும். புத்திரர்கள் மேம்படுவர். திருமணம் கை கூடும். மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீகச் சொத்தில் உள்ள வில்லங்கங்கள் நீங்கி, அதன் மூலம் நல்ல லாபம் கிடைக்க வழியுண்டு. வாழ்க்கைத்துணையின் உடல் நலம் சிறப்படையும். சகோதரர்கள் மேன்மை அடைவர். அவர்களாலும் நன்மை கிடைக்கும். குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்தி செய்து வைப்பீர்கள். மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை ., கொஞ்சம் சோதனைகள் ஏற்படவாய்ப்புண்டு. எதிரிகளின் தொல்லையும் , மேலதிகாரிகளின் கெடுபிடியும் அதிகமாகும். விரயச் செலவுகள் அதிகமாகும். பிறருக்குக் கடன் கொடுத்தால் திரும்ப வராது. புத்திரர்களால் மனக்கவலை ஏற்படும். கணவன் ம்னைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். சுப காரியங்கள் தடைப்படும். குடும்பத்தில் அவ்வப்போது சண்டை சச்சரவுகள் ஏற்படும்..புதிய கடன்களில் மாட்டிக் கொள்வீர்கள். உங்கள் நாணயத்தைக் காப்பாற்றிக்கொள்ள நீங்கள் மிகவும் சிரமப் பட வேண்டியிருக்கும். ஆனால், அக்டோபர் மாதத்தின் பின் பகுதியிலிருந்து , இந்த நிலை மாறி மேற்சொன்ன நற்பலன்கள் திரும்ப மேம்படும். அதே சமயத்தில் 11ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிப்பது அந்த நற்பலன்களை இன்னும் அதிகப்படுத்திக் கொடுக்கும்.மன தைர்யம் கூடும். கௌரவம் உயரும். எதிர்பாராத வருமானம் கிடைக்கும். பெண்களால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் அவ்வப்போது ஏற்படும் சிறு சிறு சலசலப்புகள் கூட சரி செய்யப்படும் .தொழில் ,வியாபாரம் மேலும் முன்னேற்றம் அடையும். நல்ல தொழிலாளர்கள் கிடைபபர்கள். வாழ்க்கைத் துணையின் அனுசரணை கிடைக்கும். எதிரிகள் வலுவிழப்பார்கள் தாயாரின் நிலை மேம்படும். சொந்த வீடு, வாகனம் , வாங்கும் நிலை உண்டாகும். இதுவரை இருந்து வந்த வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். எனவே இந்த ஆண்டு ஒரு இனிமையான ஆண்டாகவே கழியும் என்பதில் சந்தேகமில்லை. மாதவாரியகப் பார்க்கும்போது, ஜனவரி மாதம் எதிரிகளால் அவமானம் ஏற்படும். மற்றும் ஏப்ரல், ஜூன், ஜூலை மாதங்களில் கொஞ்சம் கவனம் தேவை. இறைவனை வணங்கி, கீழே தரப்பட்டுள்ள பரிகாரங்களைத் தவறாமல் செய்து இந்த ஆண்டை மகிழ்ச்சியோடு கொண்டாடுங்கள்.
பரிகாரம்
**********
ஆண்டு முழுவதும் ,ஞாயிற்றுக்கிழமைதோறும் ராகு காலத்தில் துர்கைக்கு எலுமிச்சம்பழ விளக்குப் போட்டு ,மே மாதம் முதல் தட்ஷிணாமூர்த்திக்கு வியாழக்கியமைதோறு்ம் ,பொன்னரளிப்பூ மாலை போட்டு , கொண்டக்கடலை நைவேத்தியம் செய்யவும்.வாழ்க! பல்லாண்டு!
————————————————————————–

Advertisements